விவசாயிகள்-விவசாய ஆராய்ச்சியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகள்- விவசாய ஆராய்ச்சியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் கோயம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பண்ணை வருமானத்தைப் பெருக்க நவீன கருவிகளை வழங்குகிறார் பல்கலைக்கழக துணை

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் நிதியுதவியின் பேரில் முதலில் விவசாயி என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. கால்நடை பல்கலைக்கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர்குளம், கோயம்பாக்கம், கரியாம்பேடு, கிளாம்பாக்கம் மேலகொண்டையூர், பண்டிகாவனூர் ஆகிய 6 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு உதவும் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பங்களான தாது உப்பு கலவை, கறவை மாடுகளுக்கான பால்மடி காப்பான், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பண்ணை உற்பத்தி பெருகவும், பண்ணையின் தர மேலாண்மைக்கும் பல்வேறு விலை குறைந்த தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. எனவே பண்ணையாளர்கள், விவசாயிகள் இதனை வாங்கிப் பயனடைய வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பண்ணைகள் ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகளுடன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கலந்துரையாடி அவர்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், ஆலோசனை அளிக்கவும் செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள், விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கால்நடை ஆராய்ச்சி திட்ட பயன்பாடு மற்றும் பரிமாற்றுதள மையத்தின் இயக்குநர் ஜி.தினகர்ராஜ், விரிவாக்கக் கல்வி இயக்குநர் சுதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com