மதுராந்தகத்தில் சாலை மறியல்; ஸ்டாலின் கைது

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுராந்தகத்தில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட திமுக செயல்
மதுராந்தகத்தில் மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
மதுராந்தகத்தில் மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுராந்தகத்தில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை வந்தார். அப்போது அவரையும், திமுக எம்.பி.யான ஆர்.எஸ்.பாரதி, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏவுமான சுந்தர், எம்எல்ஏக்கள் புகழேந்தி, மருத்துவர் ஆர்.டி.அரசு, முன்னாள் எம்எல்ஏ உக்கம் சந்த் உள்ளிட்ட நிர்வாகிகளைக் கைது செய்து வேனில் ஏற்ற போலீஸார் முற்பட்டனர். 
அப்போது, அருகில் இருந்த அக்கட்சி நிர்வாகிகளும்,தொண்டர்களும் அந்த வேனுக்கு முன்னால் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை காலை திருமணம் செய்து கொண்ட மணமக்களான மௌனிகா-பிரகாஷ் தம்பதியினரும் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார். 
பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அச்சிறுப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியது:
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பற்றி வாய் திறக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பேச வைத்தவர்கள் மக்கள்தான். அவர், நான் நாடகம் நடத்துவதாகக் கூறுகிறார். ஆனால் பழனிசாமி நடத்துவதுதான் கபட நாடகம். தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் இறந்துவிட்டனர். 45 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதை எல்லாம் கண்டிக்கும் வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள 9 கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதற்காக வியாபாரிகள், அனைத்துக் கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் இன்றுடன் முடிவடையாது. தூத்துக்குடி சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியும், காவல்துறைத் தலைவர் ராஜேந்திரனும் விலக வேண்டும். முதல்வர் தனது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, அதில் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்றார் அவர்.
முன்னதாக, மதுராந்தகம் திமுக நகர செயலர் கே.குமாரின் மகள் மௌனிகா மற்றும் திமுக ஒன்றியச் செயலர் கண்ணன் மகன் பிரகாஷ் திருமணத்தை நடத்தி வைக்க ஸ்டாலின் அச்சிறுப்பாக்கம் வந்தார். அவர்களது திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலினை மதுராந்தகத்தில் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை 6 மணிக்கு அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர். 
போக்குவரத்து பாதிப்பு: மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்ற முற்பட்டபோது திமுக தொண்டர்கள் வேனுக்கு முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் தடுக்கப்பட்டன. மதுராந்தகம் பஜார் வீதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்தும் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com