ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் சந்தோஷம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் சந்தோஷப்படும் முதல் ஆளாக நானிருப்பேன் என மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் சந்தோஷம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் சந்தோஷப்படும் முதல் ஆளாக நானிருப்பேன் என மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
 மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டு நிறைவையொட்டி, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விமான நிலைய மேம்பாடு, புதிய ராணுவ மண்டலம் என பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் அமைய மாநில அரசுதான் பரிந்துரைக்க வேண்டும்.
 பிரிவினை பேசுவோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். ஸ்டெர்லைட் ஆலைக்குச் சுற்றுச்சூழல் துறை சான்று மத்தியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோதுதான் வழங்கப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் பாஜகவே எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. தமிழ், தமிழரின் முன்னேற்றத்துக்கு திராவிட ஆட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லை. தியாகி வாஞ்சிநாதனை கொச்சைப்படுத்துவோரைக் கூட காங்கிரஸ், திமுக ஆதரிக்கும் நிலை உள்ளது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com