ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என சட்டப்பேரவையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வருக்கு ஸ்டாலின் பகிரங்க சவால் 

ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க தயாரா என்று முதல்வர் பழனிசாமிக்கு, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என சட்டப்பேரவையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வருக்கு ஸ்டாலின் பகிரங்க சவால் 

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க தயாரா என்று முதல்வர் பழனிசாமிக்கு, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழன் அன்று பேசிய முதல்வர் பழனிசாமி, '2010-ல் ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக  இருந்தபோது தான் ரூ.1500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அங்கு மாதிரி சட்டசபையில் ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசி விடலாம் ஆனால். சட்டசபையில் உண்மையே பேச வேண்டும். சட்டசபையில் பேசினால் உண்மை வெளிவந்து விடும் என்ற அச்சம் காரணமாகதான் தி.மு.கவினர் சட்டசபைக்கு வரவில்லை' என்று குற்றம் சாட்டினார்.  

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வர் பழனிசாமிக்கு, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டப்பேரவையில் நேரடியாக விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக இருக்கிறோம். மேலும் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்கவும் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com