பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நுழைவுச்சீட்டு இல்லாமலே பருவத் தேர்வெழுத அனுமதி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முறையில் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இன்றி மாணவ, மாணவியர் வியாழக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  
பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நுழைவுச்சீட்டு இல்லாமலே பருவத் தேர்வெழுத அனுமதி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முறையில் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இன்றி மாணவ, மாணவியர் வியாழக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில், தேர்வுக்கு வழக்கமாக அந்தந்த கல்லூரிகளே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) மாணவர்களுக்கு வழங்கி வந்த நிலையில், பல்கலைக்கழகம் சார்பில் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 

தேர்வுக்கு ஓரிரு நாள்களே இருந்த நிலையில், திடீரென இணையதளம் மூலம் தேர்வுக்கூடநுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை அறிவிக்கப்பட்டதால் கல்லூரி நிர்வாகங்களும், மாணவர்களும் அதிருப்தியடைந்தனர். மேலும், போதிய ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் காமராஜர் பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்வதிலும் பிரச்னை ஏற்பட்டது. 

இந்தநிலையில், வியாழக்கிழமை தேர்வுகள் தொடங்கின. ஆனால் பெரும்பாலான மாணவர்களால் இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்தது. குறிப்பாக மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பொருளியல் மற்றும் நிர்வாகவியல் இளங்கலை மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவர்களை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இன்றி தேர்வெழுத அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது.  

இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூறியது:  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் ஓரிரு மாணவர்களுக்கே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இணையதளம் மூலமே மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். முதல் நாள் என்பதால் சிலருக்கு நுழைவுச்சீட்டு கிடைத்திருக்காது. அதை சீராக்கியுள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com