கஜா புயல் எதிரொலி: 22 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும்
கஜா புயல் எதிரொலி: 22 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயலை காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்ததையடுத்து பல்வேறு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.  

கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த காற்று தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், கரூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com