6 மாவட்டங்களில் மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 1.35 லட்சம் பேருக்கு சிகிச்சை

கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கை
6 மாவட்டங்களில் மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 1.35 லட்சம் பேருக்கு சிகிச்சை


கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கை 2,214-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடந்த 5 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 271 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 2,214-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 5 நாள்களில் 1,35,271 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளில், 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோட்டரி சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கூடுதலாக மருத்துவ முகாம்கள், கொசு ஒழிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் நோய்த் தடுப்புப் பணிக்காக கூடுதலாக 400 டன் பிளீச்சிங் பவுடர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ரூ.80 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு: 6 மாவட்டங்களுக்கு மட்டும் மாத்திரைகள் வாங்க கூடுதலாக ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பணியில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு உதவியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூடுதலாக இரண்டு துணை இயக்குநர்கள் தலைமையிலான குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com