வடகிழக்குப் பருவ மழை சென்னையை  வாழவைக்குமா? மீண்டும் வாட விடுமா?

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனது போல இந்த ஆண்டு இருக்காது என்றும், வழக்கமானதை விடவும் கூடுதலாக மழை பெய்யும் என்றும் வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்தன.
வடகிழக்குப் பருவ மழை சென்னையை  வாழவைக்குமா? மீண்டும் வாட விடுமா?


கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனது போல இந்த ஆண்டு இருக்காது என்றும், வழக்கமானதை விடவும் கூடுதலாக மழை பெய்யும் என்றும் வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு முற்றிலுமாக பருவ மழை கைவிரித்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கோடை காலத்தை மிகக் கஷ்டப்பட்டே கடக்க வேண்டியதானது.

இந்த நிலையில் வானிலை முன்னறிவிப்பு சற்று ஆறுதல் தந்தாலும் இதுவரை அவர்கள் சொன்னது போல சென்னைக்கு நடக்கவில்லை.

இன்றும், நாளையும் சென்னைக்கு மழை வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை அளவு 61% பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு நாள் மழை அதைப் பூர்த்தி செய்யுமா? இல்லை ஆறுதல் மட்டுமே தருமா?

நவம்பர் மாதம் என்றாலே மழை மாதம்தான். வழக்கமாக இந்த மாதத்தில் 374.4 மி.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த மாதம் இதுநாள் வரை வெறும் 55 மி.மீ. மழைதான் சென்னையில் பதிவாகியுள்ளது. இன்னும் 10 நாட்கள்தான் இருக்கின்றன. முதலில் வடகிழக்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்கியது. தற்போது  சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மழை இல்லை. இந்த மாதத்தில் ஒரு 5 நாள்தான் நல்ல மழை பெய்திருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்லும் புள்ளி விவரத்தில் 11.5 நாட்கள் மழை பெய்திருப்பதாகக் கூறுகிறது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், உண்மைதான், சென்னைக்கு வழக்கமான அளவை விட குறைவான மழைதான் இதுவரைக் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பற்றாக்குறை மழை என்பதை இவ்வளவு சீக்கிரம் கூறிவிட முடியாது. இன்றும், நாளையும் சென்னைக்கு மழை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை இன்றும் நாளையும் 150 மி.மீ. மழை அளவைப் பெற்று விடும் என்றும், ஒருவேளை அப்படிப் பெய்யவில்லை என்றால் மிகப்பெரிய பஞ்சத்தைக் காண நேரிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. இன்றும் நாளையும் பெய்யும் மழை மட்டும் அவற்றை நிரப்பி விடாது. எனவே மேலுமொரு கன மழைக்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே  'எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார்.. ' என்ற பாடலைப் பாடும் சூழ்நிலைக்கு சென்னைவாசிகள் செல்ல வேண்டியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com