தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை: விஜயகாந்த் கண்டனம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள பதிவில், 

"ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய்?! அதிமுகவினர் 3 பேரை விடுதலை செய்ய தமிழகஅரசு பரிந்துரை செய்ததுபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழகஅரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவிகள் பேருந்தில் பயணித்த போது, உயிரோடு எரித்து கொலை செய்த 3 அதிமுக நிர்வாகிகளை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர், பேரறிவாளன்,முருகன்,நளினி உள்பட 7 பேரை ஏன் விடுதலை செய்யவில்லை?"

முன்னதாக, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, இதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்தது. 

இதையடுத்து, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் மாளிகை அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com