அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.8 கோடி மதிப்பிலான நிலம் தானம்

ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த முதியவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி கிராமத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள 40 ஏக்கர் நிலத்தை அடையாறு புற்று நோய்  ஆராய்ச்சி மையத்திற்கு தானமளித்த சுப்பாராவ், பிரமிளா  ராணி.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள 40 ஏக்கர் நிலத்தை அடையாறு புற்று நோய்  ஆராய்ச்சி மையத்திற்கு தானமளித்த சுப்பாராவ், பிரமிளா  ராணி.


ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த முதியவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி கிராமத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு புதன்கிழமை தானமாக அளித்தார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சுப்பாராவ்(74). இவரது மனைவி கே.பிரமிளா ராணி(65). இவர்கள் இருவருக்கும் சொந்தமான 40 ஏக்கர் நிலம் கும்மிடிப்பூண்டி அருகே சூரப்பூண்டி கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பெயரில் கும்மிடிப்பூண்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் புதன்கிழமை பத்திரப் பதிவு செய்து தானமாக வழங்கினர்.
தானமாக வழங்கப்பட்ட இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும். 
இது குறித்து நிலத்தை தானமாக வழங்கிய சுப்பாராவ் கூறுகையில், இவரது தந்தை கிருஷ்ணய்யா, 1974-ஆம் ஆண்டு புற்று நோயால் உயிரிழந்தார். 
அந்த சமயத்தில், புற்று நோய்க்கான போதிய மருத்துவ சிகிச்சை வசதி இல்லை. எங்கேயோ ஒருவரிடம் இருந்த புற்று நோய், தற்போது பல்வேறு காரணங்களால் பரவலாக காணப்படுகிறது. 
இந்நிலையில், அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையம், மனிதாபிமான அடிப்படையில் புற்று நோய்க்கான சிகிச்சையை சேவையாக செய்து வரும் நிலையில், அந்த மையத்திற்கு எங்களால் முடிந்த உதவியை எங்கள் தந்தையின் நினைவாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த 40 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com