"புஷ்கர நாளில் முன்னோரை வழிபட்டால் நன்மை பெறலாம்'

மஹா புஷ்கர நாள்களின்போது முன்னோர்களை நினைத்து வழிபடும் போது சகல நன்மைகளையும் பெறலாம் என, திருநெல்வேலிக்கு புனித நீராட வந்த ஆந்திரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
"புஷ்கர நாளில் முன்னோரை வழிபட்டால் நன்மை பெறலாம்'

மஹா புஷ்கர நாள்களின்போது முன்னோர்களை நினைத்து வழிபடும் போது சகல நன்மைகளையும் பெறலாம் என, திருநெல்வேலிக்கு புனித நீராட வந்த ஆந்திரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
 தாமிரவருணி மஹா புஷ்கர விழாவில் பங்கேற்க ஆந்திரம், தெலங்கானா பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்த ஆந்திரத்தைச் சேர்ந்த பக்தரான ஹெக்டா.நாராயணராவ் கூறியது: ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகேயுள்ள சீராலா பகுதியில் இருந்து 18 பேர் அடங்கிய குழுவினர் தாமிரவருணி புஷ்கர விழாவில் பங்கேற்க வந்துள்ளோம்.
 ஆந்திர மக்களின் நம்பிக்கைகளில் முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியமானது. அமாவாசை உள்ளிட்ட காலங்களில் முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், சில நேரங்களில் சிலரை எண்ணி வழிபடாமல் போகும்போது அதன் பலன் தோஷமாக நம்மை மட்டுமன்றி நம்முடைய சந்ததியையும் பாதிக்கும். பித்ருபிரம்ம தோஷத்தால் பாதிக்கப்படும் ஒருவர் பொருளாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றில் சிரமம் அடைவார். குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும் என்பதும் நம்பிக்கையாகும். ஆகவே, ஏற்கெனவே மறக்கப்பட்ட அல்லது தோஷத்தை நீக்க, புஷ்கர நாள்களில் புண்ணிய நதிகளில் வழிபட வேண்டியது அவசியமாகும். அதன்படி தாமிரவருணி மஹா புஷ்கர நாள்களில் நீராட வந்துள்ளோம். புஷ்கர நாளில் நீராடுவதால் சகல பாக்கியங்களும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்றனர்.
 நான்காவது புஷ்கரம்: ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சீனிவாசலு கூறியது: புஷ்கர விழா நடைபெறும் நதிகளில் நீராடி வருண பகவானையும், மும்மூர்த்திகளையும் வழிபடுவது எங்கள் வழக்கம். ஏற்கெனவே துங்கபுத்திரா, கிருஷ்ணா, கோதாவரி மஹா புஷ்கர விழாக்களில் பங்கேற்றோம். இப்போது எனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவில் பங்கேற்க திருநெல்வேலிக்கு வந்துள்ளேன். இங்கிருந்து ராமேசுவரம், திருச்செந்தூர் செல்லவும் முடிவு செய்துள்ளோம். ஐஸ்வர்யமும், மன மகிழ்ச்சியும் தரும் புஷ்கர வழிபாட்டில் தொடர்ந்து பங்கேற்போம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com