காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் ஆற்றுப்படுகை சட்டம் கூடாது

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் வகையில், ஆற்றுப் படுகை மேலாண்மைச் சட்ட முன்வரைவு இருப்பதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் ஆற்றுப்படுகை சட்டம் கூடாது

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் வகையில், ஆற்றுப் படுகை மேலாண்மைச் சட்ட முன்வரைவு இருப்பதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஆற்றுப் படுகை மேலாண்மை சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட முன்வரைவு வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. காவிரி உள்ளிட்ட அனைத்து நதிநீர் பிரச்னைகளுக்கும் 1956-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நதி வாரியங்கள் சட்டத்தின் மூலமாகவே தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிதாக நிறைவேற்றப்படவுள்ள ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டத்தின்படி காவிரி உள்ளிட்ட 13 ஆறுகளின் நீர்ப்பகிர்வு சிக்கலுக்கு தீர்வு காண 13 ஆற்றுப்படுகை ஆணையங்கள் அமைக்கப்படும்.
 ஒவ்வொரு ஆணையத்திலும் ஒரு நிர்வாகக் குழுவும், ஒரு செயலாக்கக் குழுவும் இருக்கும். இந்தக் குழுவின் மூலம் ஆற்று நீர் பிரச்னைகளுக்கு விரைவாகத் தீர்வு காண முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
 காவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 45 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நடுவர் மன்றம் வரையறுத்தவாறு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை என்ற போதிலும், இதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஆணையத்தை முடக்கும் வகையிலான ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com