வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11.91 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 11.91 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11.91 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 11.91 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் கடந்த செப்டம்பர் 1 -இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகளுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 2 சிறப்பு முகாம்களும், அக்டோபர் 7, 14 ஆகிய தினங்களில் இரண்டு சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.
11.91 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்ற அக்டோபர் 14-ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மட்டும் 11.91 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இதேபோன்று, பெயர் நீக்கம் செய்வதற்கு 1.36 லட்சம் பேரும், திருத்தங்களை மேற்கொள்ள 1.81 லட்சம் விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு பெயர், முகவரி உள்ளிட்டவற்றை மாற்ற 1.13 லட்சம் விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
15 நாள் அவகாசம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்களை அளிக்க இன்னும் 15 நாள்களே அவகாசம் உள்ளது. வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வேலை நாள்களில் இதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், தேர்தல் துறையின் இணையதளம் (www.tnelections.gov.in) வழியாகவும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். 
பூர்த்தி செய்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, களஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4 -ஆம் தேதி வெளியிடப்படும். 
அடுத்த 15 நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாவிட்டாலும், தொடர்ந்து பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். 
இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜனவரி 4 -ஆம் தேதிக்குப் பிறகு, அதாவது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாகு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com