தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் வேலுமணி 

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் வேலுமணி 

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை- காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற
உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 4,500 தண்ணீர் லாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இந்தப் பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை குடிநீர்
வாரிய மேலாண்மை இயக்குநர், சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அமைச்சர் வேலுமணி கூறியதாவது, 
லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யும் நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். முதல்வர் உத்தரவின்படி துணை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது. 

நீதிமன்றம் சில நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு தண்ணீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com