க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது: திமுக தலைவர் ஸ்டாலின் 

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது எனவும், அவரை காண தொண்டர்கள் வர வேண்டாம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 
க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது: திமுக தலைவர் ஸ்டாலின் 

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது எனவும், அவரை காண தொண்டர்கள் வர வேண்டாம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (சனிக்கிழமை) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுமை காரணமாக அன்பழகனுக்கு நீர்ச்சத்து குறைந்து அதிக சோர்வு ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை 2-ஆவது முறையாக மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. அவர் சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தொண்டர்கள் அவரை காண மருத்துவமனைக்கு வர வேண்டாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com