காங்கிரஸுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

 காங்கிரஸுடனான கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
காங்கிரஸுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

காங்கிரஸுடனான கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
 சென்னை விமான நிலையத்தில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து வருகிறேன். இது எனக்கான அடையாளத்துக்காக அல்ல. ஏற்கெனவே மக்கள் என்னை அறிவார்கள். அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிவதற்காக மக்களைச் சந்திக்கிறேன். தேர்தல் பணிகளை எங்கள் கட்சிகளுக்குள்ளே பேசி தயார்படுத்தி வருகிறோம்.
 ராகுல் காந்தியை இப்போது சந்திக்கவில்லை. முன்புதான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பின் மூலம் கூட்டணியா என்பதையெல்லாம் இப்போது கூற முடியாது. சபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது. ஏனென்றால் அது பற்றி எனக்குத் தெரியாது.
 காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் கேரளத்தில் மதிக்கப்படவில்லை. அதேசமயம் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு வரவேற்றது. ஆனால், சபரிமலையில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதில் அரசியல் இருக்கிறது.
 கமல் நடிப்பு பிடிக்கும், ஆனால், அவரின் அரசியல் பிடிக்காது என்று துரைமுருகன் கூறியிருப்பதாக செய்தி வந்துள்ளது. எனக்கு துரைமுருகனின் நடிப்பு பிடிக்கவில்லை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னைத் தொடர்ந்து விமர்சிப்பதற்கு, என் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பதற்றம்தான் காரணம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com