சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு; பெருவுடையாருக்கு 48 வகை பேரபிஷேகம்

தஞ்சாவூரில் 1033 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மாலை அணிவித்தனர்.
சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு; பெருவுடையாருக்கு 48 வகை பேரபிஷேகம்

தஞ்சாவூரில் 1033 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மாலை அணிவித்தனர்.
 தஞ்சாவூர் பெரியகோயிலில் சதய விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, ராஜராஜசோழன் பிறந்த சதய நட்சத்திர நாளான சனிக்கிழமை பெரியகோயில் முன்புறம் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மாலை அணிவித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், திருவாவடுதுறை கட்டளை சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், சதய விழாக் குழுத் தலைவர் துரை. திருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து, பாஜக, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, தேவேந்திர குல வேளாளர் சங்கம், தமிழ்நாடு சமாஜ்வாதி, பார்வர்டு பிளாக் கட்சி உள்பட சுமார் 50 அமைப்புகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தின.
 மேலும், நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற திருமுறை திருவீதியுலாவில் ஓதுவார்கள் திருமுறைகளை ஓதி சென்றனர். இதையடுத்து, பெருவுடையார், பெரியநாயகிக்கு நடைபெற்ற பேரபிஷேகத்தில் பால், தேன், நெய், விபூதி, மஞ்சள், பசுந்தயிர், திரவியப் பொடி, மாதுளை, அன்னாசி, திராட்சை, விளாம்பழம், சந்தனம், பன்னீர் உள்பட 48 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் திருவாசகம் பாடி, அதன் பெருமைகளை விளக்கினார்.
 இதைத் தொடர்ந்து, பெருவுடையார், பெரியநாயகிக்குப் பெருந்தீப வழிபாடு நடத்தப்பட்டது. மாலையில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com