ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது

திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது

திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
 அதிமுக வின் 47 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
 எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி இக்கட்சியை வளர்த்துள்ளனர். எம்.ஜி.ஆர். இருந்தபோது அதிமுகவில் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதனை 1.50 கோடி உறுப்பினர்களாக உயர்த்தியவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என இருவரும் ஆட்சி நடத்தினர். அவர்களது வழியில் தற்போது எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். மக்கள் நலத்திட்டங்கள் தொலைநோக்குடன் தொடங்கி தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 2016 சட்டப் பேரவை தேர்தலில் எப்படியாவது அதிமுகவை தோற்கடித்துவிட வேண்டும் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எண்ணிணார். அவரது எண்ணம் நிறைவேற வில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார்.
 ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டும் என நினைத்த பலர் தோற்றுப் போயினர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது கட்சியும் ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என தினகரன் முயற்சித்து தோல்வியடைந்து வருகிறார். அவரது சதிவேலைகள் மக்களிடம் அவர் எப்படிபட்டவர் என வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
 ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டதில் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் கதி அதோகதியாகப் போகிறது. தொண்டர்கள் அதிமுகவின் பக்கம் இருக்கும் போது யாரும் எதுவும் செய்யமுடியாது. தினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என வாரி வழங்கி வருகிறார். அவர் ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஜோதிடரிடம் வெற்றி பெற இயலுமா என கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
 அவர் குழப்பத்தை உருவாக்கி சித்து வேலை செய்து ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என எண்ணுகிறார். அதுபலிக்காது. அதிமுக ஒரு எஃகு கோட்டை. ஸ்டாலினை திமுகவினர் தலைவராக ஏற்றுக் கொள்ள வில்லை. தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. ஸ்டாலின் என்னசெய்தாலும் அது மக்களிடம் எடுபடாது என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com