தாமிரவருணி புஷ்கர விழா மூலம் நதியைப் பாதுகாக்க மக்களிடம் உறுதி: வேளாக்குறிச்சி ஆதீனம்

தாமிரவருணி புஷ்கர விழா மூலம் நதியைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்றார் வேளாக்குறிச்சி ஆதீனம்.
மஹா புஷ்கர விழாவில் கலந்துகொண்டு ஆசி வழங்குகிறார் வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
மஹா புஷ்கர விழாவில் கலந்துகொண்டு ஆசி வழங்குகிறார் வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.


தாமிரவருணி புஷ்கர விழா மூலம் நதியைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்றார் வேளாக்குறிச்சி ஆதீனம்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயில் தீர்த்தப்படித்துறையில் நடைபெற்ற மஹா புஷ்கர விழாவில் பங்கேற்ற செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீட விவேகானந்த ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினர்.
விழாவில் கலந்துகொண்டு வேளாக்குறிச்சி ஆதீனம் பேசியதாவது: மஹா புஷ்கரம் விழாவை மக்கள் எழுச்சியுடன் தாமாக முன்வந்து தன்னெழுச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். நதியை மாசடையாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நதியானவள் தாயாக போற்றப்படுபவள்.
தென்னக கங்கையான தாமிரவருணி ஒருகாலத்தில் கன்னியாகுமரி முதல் மதுரை வரை ஓடியிருக்கிறது. அதன்பின்னர் பல இடங்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் சரஸ்வதி நதியைப் போல தாமிரவருணி நதியும் குறிப்பிட்ட பகுதியை தாண்டி அந்தர்வாகினியாக மறைந்து இருக்கும் என்ற கருத்து நிலவிவருகிறது. இந்த நதி பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு பல வகைகளில் பயன்பட்டு வருவதுடன், வற்றாத நதியாகவும் உள்ளது. தமிழகத்தில் பாயும் பொருநை நதி அன்னையாகவும், பொன்னி நதி கன்னியாகவும் போற்றப்படுகின்றன. அற்புதமான, அதிசயக்கத்தக்க வகையிலான பொருநை நதி, வேத காலத்திலேயே போற்றப்பட்டு வந்திருக்கிறது. மஹா புஷ்கரம் விழா நல்ல பயனை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட வேண்டும் என்றார் அவர்.
சபரிமலை விவகாரம்: தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை புனிதமான இடம். இக்கோயிலில் தாந்திரீக வழிபாடு நடத்தப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் பெண்ணியம் சார்ந்த மாயத் தோற்றத்தை முன்வைத்தார். ஆனால் தாந்திரீக வழிபாட்டை புரிந்துகொள்ள முடியாத நிலையில் தீர்ப்பு வந்துள்ளது. 
சமய வழிபாட்டில் பல்வேறு வகை ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளத்தில் தாந்திரீக வழிபாடு முறை பின்பற்றப்படுகிறது. சபரிமலையில் பெண்ணியத்துக்கு எதிரான வழிபாடு இல்லை.
இக்கோயிலில் 10 வயது வரையிலும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோயிலுக்கு பெண்கள் செல்வது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறை தொடரவேண்டும். ஆகவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். 
மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, இந்த விஷயத்தில் கேரள அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசும் முனைப்பு காட்ட வேண்டும். இறை திருவருளால் தீர்ப்பு திருத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com