மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத் திட்டம் மாற்றப்படும் : அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் தனித்திறன்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிதாக 12 திறன் வளர்ப்பு பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
 வெள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன். அருகில்  அமைச்சர்கள்  பா. பெஞ்சமின், க. பாண்டியராஜன்.
 வெள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன். அருகில்  அமைச்சர்கள்  பா. பெஞ்சமின், க. பாண்டியராஜன்.


அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் தனித்திறன்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிதாக 12 திறன் வளர்ப்பு பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளியூர் கிராமத்தில் ஒரே வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
அதைத்தொடர்ந்து, இப்பள்ளிக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். 
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 4 உயர்நிலைப்பள்ளிகள், 5 மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வெள்ளியூர் மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு திட்டம் மூலம் 8 வகுப்பறைகளும், பள்ளிகளில் சுற்றுச்சுவரும், தொடக்கப்பள்ளிக்கான 4 வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவை அமைத்துக் கொடுக்கப்படும். 
அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் 12 திறன் வளர்ப்பு பயிற்சிக்கான பாடங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதனால் படித்தவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை மாற்றி, இனிமேல் பிளஸ் 2 முடித்தாலே வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 
நிகழ்வில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் குமாரசாமி, வட்டாரக் கல்வி அலுவலர் கிரிஜா, முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் புட்லூர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
துப்புரவுத் தொட்டி வைக்க வலியுறுத்திய அமைச்சர் வெள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வகுப்பறைகளாக அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மகளிர் பள்ளியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தது. அதேசமயம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் அசுத்தமாக இருந்தன. இதைக்கண்ட அமைச்சர், மாணவர்கள் வகுப்பறைகளிலேயே சுத்தம், சுகாதாரத்தை கற்றுக் கொள்ள வேண்டும். 
வகுப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். பின்னர், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாத ஆசிரியர்களை அவர் கடிந்து கொண்டார். அதையடுத்து பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உடனே ஒவ்வொரு வகுப்பறையிலும் துப்புரவுத் தொட்டிகள் வைக்கும்படி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com