பள்ளிகளில் சேர ஆதார் கட்டாயமில்லை

ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் சேர ஆதார் கட்டாயமில்லை


ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்க ளின் தலைமைச் செயலாளர்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சில பள்ளிகளில் ஆதார் இல்லாததை காரணம் காட்டி மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட மறுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆதார் இல்லாத காரணத்துக்காக மாணவர்கள் சேர்த்து கொள்ள மறுக்கப்படும் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோல், ஆதார் இல்லாததை சுட்டிக்காட்டி, பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுப்பது, சட்டத்துக்கு எதிரான செயலாகும். மேலும் விதிகளை மீறும் செயலாகும்.
ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் சேர்க்க எந்த மாணவர்களுக்கும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. அதேபோல், பள்ளிகளில் வேறு சலுகைகளையும் மறுக்கக் கூடாது.
மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல், ஆதார் தகவல்களை திருத்துதல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், பள்ளி கல்வித் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் பள்ளிகள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் ஆதார் பதிவு செய்தல், ஆதார் திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com