புழல் எதிரொலி: மதுரை மத்திய சிறையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புழல் எதிரொலி: மதுரை மத்திய சிறையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்துக் கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது.

இச் செய்தியின் எதிரொலியாக, சிறைத்துறை உயா் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனா். மேலும் சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் திடீா் சோதனை நடத்தினாா். 

இச்சோதனையில் அங்கிருந்து 20 டி.வி.கள், மிக்ஸி, பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள்,பீடி,வெளிநாட்டு சிகரெட், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இது தொடா்பாக தண்டனைச் சிறையில் ஏ பிரிவில் அடைக்கப்பட்டிருந்த முகம்மது ரிகாஸ்,முகம்மது ரபீக்,முகம்மது இப்ராஹிம்,முகம்மது ஜாகீா், ரபீக் என்றற நூருதீன் ஆகிய 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, கோயம்புத்தூா்,சேலம்,கடலூா்,பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் இணைந்து செப். 16-ஆம் தேதி திடீா் சோதனை நடத்தி, பீடி,சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினா். 

இந்த விவகாரம் தொடா்பாக புழல் தண்டனைச் சிறையில் இருந்த இரு தலைமை வாா்டா்கள், 6 முதல்நிலை வாா்டா்கள் செப். 17-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 

இதையடுத்து, புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் பணிபுரிந்த 2 தலைமை வாா்டா்கள், 7 முதல்நிலை வாடா்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறைற ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா செப். 18-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உதவி ஆணையர் மற்றும் 2 ஆய்வாளர்கள் தலைமையில் சுமார் 150 போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com