வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (செப். 23) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (செப். 23) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 644 வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம்கள்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக அளிக்கப்பட்ட இரண்டு மாத காலத்தில் நான்கு சிறப்பு முகாம்களும் நடைபெறவுள்ளன. அதன்படி, கடந்த 9-இல் முகாம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (செப். 23) முகாம் நடக்கவுள்ளது.
வாக்குச் சாவடிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், முகாம்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாம்களின் போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முகவராக இருப்பார். அவர் தனது சார்பாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான 10 விண்ணப்பங்களை அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில்...: பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான தகவல், புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1913, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலக எண் 044 25303600, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலக எண் 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், chennaideo2017@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், மாவட்டத் தேர்தல் அலுவலகம், ரிப்பன் மாளிகை, சென்னை-3 என்ற அலுவலகத்திலும் புகார், தகவல்களைப் பெறலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com