பொது வங்கிகளை இணைப்பது தற்கொலைக்குச் சமம்: அன்புமணி கண்டனம்

பொது வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தற்கொலைக்குச் சமமானது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொது வங்கிகளை இணைப்பது தற்கொலைக்குச் சமம்: அன்புமணி கண்டனம்

பொது வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தற்கொலைக்குச் சமமானது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய தவறைச் செய்திருக்கிறது. வங்கிகள் இணைப்பு 3 வங்கிகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்பது தான் உண்மை.
சிறப்பாகச் செயல்படும் இரு பொதுத் துறை வங்கிகளுடன் மோசமாகச் செயல்படும் ஒரு வங்கியை இணைத்தால் 3 வங்கிகளும் சிறப்பாகச் செயல்படும் என்பதுதான் வங்கிகள் இணைப்பின் அடிப்படை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஆனால், இதை நம்புவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. உலகம் முழுவதும் தாராளமயமாக்கல் கொள்கை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், வங்கிகள் இணைப்பின் பயன்கள் குறித்து உலக அளவில் ஆய்வு நடத்தப்பட்டன. 1991-2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் வங்கிகள் இணைப்பால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து 2011-ஆம் ஆண்டில் உலக வங்கியும், தில்பர்க் பல்கலைக்கழகமும் இணைந்து 80 நாடுகளில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தின. பொதுத் துறை வங்கிகளை இணைப்பதால் உலக அளவிலான பெரிய வங்கிகள்தான் உருவாக்கப்படுமே தவிர, வேறு எந்த பயனும் ஏற்படாது என்று இந்த ஆய்வில் தெரியவந்தது. 
இந்தியாவில் முதல் வங்கிகள் இணைப்பு 1993-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி பஞ்சாப் தேசிய வங்கியுடன் நியூ வங்கி இணைக்கப்பட்டது. இதன் பயனாக, அதுவரை அதிக லாபம் ஈட்டி வந்த பஞ்சாப் வங்கி 1996-ஆம் ஆண்டில் முதன்முறையாக ரூ.96 கோடி நஷ்டத்தை சந்தித்தது.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கு இந்த மோசமான உதாரணத்தைப் பார்த்த பிறகும், மீண்டும், மீண்டும் பொதுத் துறை வங்கிகளை இணைக்கத் துடிப்பது தற்கொலைக்குச் சமமான முடிவு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com