கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

கருணாஸ் ஜாமீன் மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு எழும்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அவர் ஞாயிற்றுக்கிழமை மாலையே வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கருணாஸ் ஜாமீன் மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு எழும்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, கருணாஸை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com