தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்: ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்

தமிழகத்துடனான ஒடிஸா மாநிலத்தின் நல்லுறவு தொடரும் என்று அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.
சென்னை பள்ளிக்கரணையில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒடிஸா பவனை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக். உடன் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை பள்ளிக்கரணையில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒடிஸா பவனை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக். உடன் அமைச்சர் ஜெயக்குமார்


தமிழகத்துடனான ஒடிஸா மாநிலத்தின் நல்லுறவு தொடரும் என்று அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.
சென்னை பள்ளிக்கரணையில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒடிஸா பவனை, அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியது:-
ஒடிஸா மற்றும் தமிழகத்துக்கு இடையே ஒரு இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. இது தொடர்ந்திருக்கும். வணிக ரீதியிலாக ஒடிஸாவும், தமிழகமும் தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறந்த நட்பினைக் கொண்டிருந்தேன். ஒடிஸா பவன் கட்டுவதற்கான நிலத்தை அவர் வழங்கினார். இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, கடந்த 2012, மே மாதம் 11 -ஆம் தேதி நடைபெற்றது. 
இந்தியாவில் கலாசாரத்தின் பிரதான அடையாளமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதேபோன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னை நகரம் முக்கியமானதாக இருந்து வருகிறது. சென்னையில் இந்த கட்டடம் அமைந்துள்ளது பெருமிதம் அளிக்கக்கூடியதாக உள்ளது. ரூ.22 கோடியில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார் ஒடிஸா முதல்வர். 
விழாவுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியது:
ஒடிஸாவும், தமிழகமும் கலாசாரத்தில் பழம்பெருமை வாய்ந்த மாநிலங்கள். அனைத்து வகைகளிலும் ஒடிஸா மக்கள், தமிழக மக்களுடன் அன்பும், பாசமும் கொண்டிருக்கிறார்கள். நவீன் பட்நாயக் மிகவும் எளிமையானர். அவரது தந்தை பிஜூ பட்நாயக் சிறந்த தேசப்பற்று மிக்கவர். சிறந்த நாடாளுமன்றவாதி. மொராஜி தேசாய் அமைச்சரவையில் அமைச்சரவாக இருந்தார். பிஜூ பட்நாயக் மீது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகுந்த மதிப்பும், மரிதயாதையும் கொண்டிருந்தார். பிஜூ பட்நாயக் கொண்டிருந்த அதே நட்பை, அவரது மகன் நவீன் பட்நாயக்கும் கொண்டிருந்தார். இந்தக் கட்டடத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2012-ஆம் ஆண்டு மே 11-இல் அடிக்கல் நாட்டப்பட்டது என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார். இந்த விழாவில், ஒடிஸா மாநில உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com