யுத்தபூமி

அத்தியாயம் 48 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 41

யுத்தங்களுக்குப் போகும் முன், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், நம் முன்னோர்களையும், நம் முன்னோர்களை அடையாளப்படுத்தும் சான்றுகளைகளையும் நாம் தெளிவாக்கிக்கொள்ளவேண்டி உள்ளது.

14-04-2017

அத்தியாயம் 47 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 40

புடக்குகை (Crucible) உலை முறையில் இரும்பை உருக்கி எஃகு தயாரிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. இது மிக முக்கியமான தொழில்நுட்ப அறிவாகும். இத்தொழில்நுட்பம், மு.பொ.ஆ. 300 அளவிலேயே தமிழர் பெற்றிருந்தனர்.

07-04-2017

அத்தியாயம் 46 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 39

தென்னிந்தியாவில் இரும்பு தொழில்நுட்பம் அறியப்பட்டவுடன் அரசியல் தளத்திலும், மக்களின் வாழ்வியலிலும் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

10-02-2017

அத்தியாயம் 45 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 38

இரும்பு பெருவாரியாக புழக்கத்தில் வந்த பிறகு, உலக வரலாற்றில் புகழ்வாய்ந்த அரசுகளின் வீழ்ச்சிக்கும் புதிய அரசுகளின் தோற்றத்துக்கும் வித்திட்டதற்கும் அதன் பங்கு மிக அதிகம்.

16-12-2016

அத்தியாயம் 44 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 37

இந்தியா, மேற்கு உலகின் முந்தைய நாகரிகச் சமூகங்களில் இருந்து எந்தவகையில் பயனடைந்திருந்தாலும், மேற்கு உலகுக்கு இரும்பையும் எஃகையும் வழங்கியதன் மூலம், அதற்கு மிகச் சிறந்த கைமாற்றை செய்திருக்கிறது...

18-11-2016

அத்தியாயம் 43 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 36

பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழம்பை மூங்கில் அரிசிச் சோறுடன் கலந்து உண்ட காட்சி மலைபடுகடாமில் காட்டப்படுகிறது.

11-11-2016

அத்தியாயம் 42 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 35

அரிசி என்ற தமிழ்ச் சொல் ‘ரைஸ்’ என்று மருவி, உலகளாவி அப்பயிரினத்தையும் அத்தானியத்தையும் குறிக்க நிற்பதற்கான காரணங்கள் மொழித்தொல்லியல் வாயிலாக விரிவாக ஆராயப்பட வேண்டும்.

21-10-2016

அத்தியாயம் 41 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 34

2004-ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 30 கோடி ரூபாய்க்கு ஈடானது. இது ஹெர்மபோலன் என்ற சாதாரணக் கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களின் மதிப்பாகும். இதனைவிட பெரிய ரோமானியக் கப்பல்கள் இங்கு வந்துபோயுள்ளன.

23-09-2016

அத்தியாயம் 40 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 33

மேற்கு உலகில் பெருங் கற்படைப் பண்பாடு நிகழ்ந்த சமகாலத்தில், அது தென்னிந்தியாவில் நிகழவில்லை. மேற்கு உலகில் அப்பண்பாடு வீழ்ச்சியுற்ற காலத்தில் தென்னிந்தியாவில் உதயமானதாக உள்ளது. 

12-09-2016

அத்தியாயம் 39 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 32

தென்னிந்தியாவில் பெருங் கற்படைப் பண்பாடு நிலவிய காலகட்டம் குறித்து, அது அறியப்பட்டது முதல் பல்வேறுபட்ட காலவரையறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

19-08-2016

அத்தியாயம் 38 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 31

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்
பெருங் கற்படைப் பண்பாட்டு மக்களின் திணை வாழ்வியலுக்கு,

29-07-2016

அத்தியாயம் 37 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 30

 
பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்
மூத்தோர்களுக்கு புறத்தோற்றம் ஏதுமற்ற எளிய ஈமக்குழி சின்னம் முதல் 20

15-07-2016

யுத்த பூமி

நடுகற்கள் ஊடே மேற்கொள்ளப்பட்ட மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தேடும் தொல்லியல் பயணம்தான் ‘யுத்த பூமி’.

இப்பயணம், தொல்பழங்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான மனித இனம் புரிந்த போர்களின் வகைகளில், நடுகல் போர்களின் தனித்துவக் குணங்களை அடையாளம் காண்கிறது. மு.பொ. 4-ம் நூற்றாண்டில் இருந்து பொ.நூ. 16 (கி.மு.400 - கி.பி.1700) வரை, இரண்டாயிரம் ஆண்டுகள் அறுபடாத தொடர்ச்சியுடன் நடுகல் எழுப்பும் மரபு நம்மிடையே நிலவியிருந்ததை, அண்மைக்காலம்வரை கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. மூத்தோர் நினைவுச்சின்ன வகையான பெருங்கற்படைச் சின்னங்களைக் கணக்கில் கொண்டால், இம்மரபு இன்றைக்குவரை 3000 ஆண்டுகளுக்கும் மேம்பட்ட பிரமிப்பூட்டும் அறுபடாத தொடர்ச்சியைக் கொண்டிருப்பது என்பது விளங்குகிறது.

‘நடுகல்’ என்பது நடப்பட்ட கல் எனப் பொருள்மயக்கம் தருவதாக இருந்தாலும், வீரரைப் புதைத்த இடத்தில் அல்லது வீரரை நினைவுகூர்ந்து பிற இடத்தில் அமைக்கப்பட்ட கல்லே நடுகல் என அழைக்கப்படுகின்றது. இறந்தவர்கள் எல்லோருக்கும் கல் நடுதல் வழக்கமாகப் போற்றப்படவில்லை. வீரப்பண்பும், தமக்கென வாழாது சமுதாயத்துக்காகப் போராடி மாய்ந்த பெருநிலையுமே நடுகல் எழுப்பப்பட முதன்மைக் காரணமாக இருக்கின்றது.

நடுகல் வழிபாடு என்பது ‘மூத்தோர் வழிபாட்’டின் ஓர் அங்கமாகிய ‘வீர வழிபாட்டு’க்குச் சான்றாக இருப்பதாகும். நடுகல் வழிபாடு, தற்காலத்தில் எழுந்த உருவ வழிபாட்டுக்கு அடிப்படையாக அமைகின்றன என்பதை நாட்டுப்புறவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வழிபாடே, காலந்தோறும் நடுகற்களை எழுப்பும் மரபுக்குப் புறத்தூண்டுதலாக இருக்கிறது. இம்மரபு, தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லப்படும் பண்பாட்டுச் செழுமையாகியுள்ளது. இச்செழுமைதான், ஒரு வட்டச்சுழற்சியில் வீரத்தைப் போருக்கு அழைத்துச் செல்கிறது. அப்போரும், பண்பாட்டின் அடையாளமாக மிளிர்வதாக இருக்கிறது.

‘யுத்த பூமி’ எனும் இத்தொடர், அத்தியாயங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்கள் தனித்தனி கட்டுரைகள் அல்ல. ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றிலிருந்து ஒன்று நீட்சி அடைபவை; கிளைப்பவை. வாரம் ஒரு அத்தியாயம் எனத் திட்டமிட்டிருந்தாலும், ஒரு சில அத்தியாயங்கள் முழுமை பெற சில வாரங்கள் ஆகும். இது வாசகர்களின் கவனத்துக்கான தகவல்.

த. பார்த்திபன்

த. பார்த்திபன்

த. பார்த்திபன். தகடூர் பார்த்திபன் என்று அழைக்கப்படுவர். தருமபுரியை பிறப்பும், வாழிடமாகவும் கொண்டிருப்பவர். இளங்கலை அறிவியல் கல்வியுடன், குடும்பத் தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். சங்க இலக்கியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஆர்வம் மிகுந்தவர். தொல்லியலும் வரலாறும் இவர் விருப்பமுடன் தனிமுறையில் கற்றவை. ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’, ‘கிருஷ்ணகிரி மாவட்டம் – சங்ககாலம்’, ‘தொன்மைத் தடயங்கள் – தொகுதி – 1’, ‘கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி - 1, ஊத்தங்கரை வட்டம்’ ஆகிய புத்தகங்கள் இவரது ஆக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – thagadoorparthiban@gmail.com

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை