திரைக் கதிர்

கடந்த ஆண்டு மலையாள இசை மற்றும் சினிமா உலகில் பலத்த வரவேற்பை பெற்ற பாடல் "ஜிமிக்கி கம்மல்'. இந்தப் பாடலுக்கு வெவ்வேறு நடன
திரைக் கதிர்


கடந்த ஆண்டு மலையாள இசை மற்றும் சினிமா உலகில் பலத்த வரவேற்பை பெற்ற பாடல் "ஜிமிக்கி கம்மல்'. இந்தப் பாடலுக்கு வெவ்வேறு நடன அசைவுகளை ஆடி சமூக வலைதளங்களில் பலரும் பதிவேற்றினர். தென்னிந்தியா முழுமையும் கோடிக்கணக்கான ரசிகர்களை இந்த பாடல் ஆக்கிரமித்தது.  இந்தப் பாடல் மீண்டும்  ஜோதிகாவின்  "காற்றின் மொழி' படத்தில் இடம் பெற இருக்கிறது. இந்தப் படத்துக்காக நடன இயக்குநர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடனமாடினர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கின்றனர். கேரளத்தில்  ஜோதிகாவுக்கு உள்ள ரசிகர்களின் பலத்தை உணர்ந்து இப்பாடலை இதில் சேர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிம்பு கௌரவ வேடமேற்று நடிக்கிறார்.  ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தைச் சேர்ந்த  காஷிஃப் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  "ஜிமிக்கி கம்மல்' மலையாளப்  பாடலின்  உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியுள்ளது.

இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாகக் கலந்துவிட்டது. இதனால் சற்று விலை அதிகம் என்றாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது. இதைப்  பயன்படுத்தி ஆர்கானிக் உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பெரிய மோசடி நடக்கிறது. இதை தோலூரித்துக் காட்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம் "திசை'.  இப்படத்தை லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே.பாக்யராஜின் உதவியாளர் வரதராஜன் எழுதி இயக்குகிறார். புதுமுகம் பவன், யுவன் மயில்சாமி, லீமா பாபு, அதுல்யா ரவி நடிக்கின்றனர். தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.  மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைக்கிறார்.
இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.   

யாரும் எதிர்பாரா நிலையில் பாலிவுட் செல்கிறார் ரஞ்ஜித். சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையை உடனடியாகத் தொடங்க வாய்ப்பில்லாத காரணத்தால், அவர் ஏற்கெனவே திட்டமிட்டப்படி பாலிவுட் செல்வதாகச் சொல்லப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் படம், செல்வராகவனின் என்ஜிகே படங்கள் முடிவடைந்த பின்னரே சூர்யா அந்தப் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகத்  தெரிகிறது. இந்நிலையில்தான் தனது பாலிவுட் முயற்சியை நிறைவேற்றியுள்ளார் ரஞ்ஜித்.   பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை  நமா பிக்சர்ஸ் என்ற பாலிவுட் நிறுவனம் தயாரிக்கிறது. இது வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படம். புதுமுகங்கள் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ரஞ்ஜித்தின் படங்களில் சமூகம் சார்ந்த பார்வை இருக்கும். இதுவும் அதுபோன்ற கதையம்சம் கொண்ட படம்தான் என பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

நடிகைகளில் ஒரு சிலர் திருமணம் பற்றி மாறுபட்ட கருத்துகள் கூறி வருகின்றனர். திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ருதி ஹாசன் ஒருமுறை தெரிவித்தார். தற்போது அவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இருவரும் திருமணம்செய்து கொள்ள உள்ளதாக அவ்வப்போது கிசுகிசு பரவினாலும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. ஸ்ருதியின் திருமணம் பற்றி சமீபத்தில் கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்... ""திருமணம் என்பது அவரவர்களின் விருப்பம். என் விருப்பப்படிதான் என் திருமணம் நடந்தது. திருமணம் குறித்து மகள்களே முடிவு செய்வார்கள்'' என்றார். தற்போது பிரியா ஆனந்தும் திருமணம் பற்றி பதில் அளித்துள்ளார்.  "திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற  கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய தேவையில்லை. அந்த காலத்தில் பெண் என்றால் கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ளாமலும் சில பெண்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். சரியான ஒரு நபர் கிடைத்தால் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

"இவன் தந்திரன்' படத்துக்குப் பின் ஆர்.கண்ணன் எழுதி இயக்கி வரும் படம் "பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்கின்றனர். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.  ""இன்று நகரங்களில் பிழைக்க வந்து நிறைந்திருக்கும் பாதிப் பேர் விவசாயிகளின் பிள்ளைகள். பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஊர்களில் விவசாயம் பார்க்கிறார்கள். அடுத்த தலைமுறை எல்லாம் வேறு வேறு வேலைகளுக்கு  போய் விட்டார்கள். தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்ய வருவதை விவசாயிகளே விரும்புவதில்லை. இந்த கஷ்டம் எல்லாம் தங்களோடு போகட்டும் என்பதுதான் அவர்களின் நினைப்பு. விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெல்ல மெல்லச் சாகடித்து விட்டால் என்ன ஆகும் இந்த தேசம்?  இதற்கு யார் பொறுப்பு? வீரிய விதையும் ஒட்டு விதையும் தந்து விவசாயத்தை கீழே இழுப்பது யார்? இங்கே ஒரு விவசாயியை எப்படி மதிக்கிறது இந்த அரசும் சமூகமும்?  விவசாயத்தின் மீதான கடமையையும் கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணர செய்வதுதான் இந்த சினிமாவின் நோக்கம்'' என்கிறார் இயக்குநர்  ஆர்.கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com