புதிய அகராதி!

உங்கள் முகத்தில் அரிப்போ, நமைச்சலோ எடுத்தால் உங்கள் தலைமுடி சுத்தம் இல்லை என்று அர்த்தம்.
புதிய அகராதி!

சமூக வலைத்தளத்தில் படித்த பயனுள்ள தகவல்:
• உங்கள் முகத்தில் அரிப்போ, நமைச்சலோ எடுத்தால் உங்கள் தலைமுடி சுத்தம் இல்லை என்று அர்த்தம்.
• உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றுப்போக்கோ இருந்தால் உங்கள் கை விரல் நகங்கள் சுத்தம் இல்லை என்று அர்த்தம்.
• உங்கள் கண்களிலோ, மூக்கிலோ தொடர்ந்து அரித்தால் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
• உங்கள் காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால் உங்களுக்கு காய்ச்சல் வரப் போகிறது என்று அர்த்தம்.
• உங்கள் கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம்.
• உங்கள் நகக் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புகோடு விழுந்தால் இதயப் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com