சிரி... சிரி...சிரி... சிரி...

சிரி... சிரி...சிரி... சிரி...

"சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார்.''"ஏன்?''

• "கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா''
"நீ என்னாவே?''
"காலியாயிடுவேன்''

• "அவர் போலி பல் டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே?''
"பல் ஆடுதுன்னு சொன்னதும் குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதான்னு கேக்கறாரு!''
அஜித், சென்னை.

• "என்ன உன் புடவை எப்போதும் ஈரமாக இருக்கிறது?''
"இது வெல்"வெட்' துணியாயிற்றே''

• "என் கணவர் பத்து வருடங்களாக வியாபாரம் செய்கிறார். ஆனால் சேமிக்கவே இல்லை!''
"என்ன வியாபாரம் செய்கிறார்?''
"சேமியா வியாபாரம்!''

• "ஞாபகமறதி வியாதியால, பெரும் பிரச்னையா இருக்கு டாக்டர்..''
"என்ன பிரச்னை..?''
"கிளினிக்ல எந்த நர்ஸ் கிட்ட "ஐ லவ் யூ' சொன்னேன்னு மறந்து போச்சு..''
பர்வீன் யூனுஸ், ஈரோடு.

• "சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார்.''
"ஏன்?''
"அவர் வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுமாம்.''
பி.சரவணன், ஸ்ரீரங்கம்.

• தந்தை: "உன் வகுப்பில் 45 பேர் படிக்கிறாங்களா?''
மகன்: "எப்படிப்பா இவ்வளவு கரெக்டா சொல்றீங்க''
தந்தை: "நீ வாங்கியிருக்க ரேங்க் சொல்லுதேடா''
சீ.பிரவீன், தர்மபுரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com