யாருக்கும் சந்தேகம் வராது!

கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தத்திடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு
யாருக்கும் சந்தேகம் வராது!

கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தத்திடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒரு முறை கிளர்ச்சி ஒன்றின்போது ஜீவானந்தம் தலைமறை
வாகிவிட்டார்.
ஜீவா மறைந்து வாழ்வதைப் பற்றி அறிஞர் அண்ணா தாம் நடத்திய பத்திரிகையில் கண்டித்து எழுதியிருந்தார். 
எனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அண்ணா பலரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் முன்னிலையில் நேரிடையாகவே இதைப்பற்றி கேட்டேன்.
உள்ளே என்னை அழைத்துக் கொண்டு போன அண்ணா ஓர் அறையைத் திறந்தார். அங்கே ஜீவா இருந்தார்.
"அப்படி ஜீவாவைக் குறை கூறி எழுதினால்தான் யாருக்கும் சந்தேகம் வராது. அதனால் அப்படி எழுதினேன்'' என்றார். அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். 

எஸ்.எஸ்.ஆர். எழுதிய "நான் வந்த பாதை' 
என்னும் நூலில் இருந்து.
 
வி.ந.ஸ்ரீதரன், சென்னை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com