பேல்பூரி

"ஏம்பா விலை குறைவா வாங்கின செருப்பு காலைக் கடிக்குதுன்னு புலம்புறீயே... கொஞ்சம் அதிக விலை
பேல்பூரி

கண்டது
• (கர்நாடக மாநிலம் ஹம்பியில் ஓர் உணவகத்தின் பெயர்)
MANGO TREE RESTAURANT  
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.

• (சென்னை பொழிச்சலூரில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)

நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள்.
சந்தேகங்களைச் சந்தேகப்படுங்கள்.
நெ.இராமன், சென்னை-74.

• (திருச்சி இப்ராஹிம் பார்க் அருகில் உள்ள ஒரு பழைய ஹோட்டலின் பெயர்)
ஆதிகுடி காபி கிளப்
கோபு.பிரின்ஸ் ராய்,
உய்யகொண்டான் திருமலை, திருச்சி.

கேட்டது
• (திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே இருவர்)
"ஏம்பா விலை குறைவா வாங்கின செருப்பு காலைக் கடிக்குதுன்னு புலம்புறீயே... கொஞ்சம் அதிக விலை கொடுத்து நல்ல செருப்பா வாங்குறதுக்கு என்ன?''
"நீ சொல்றது கரெக்ட். விலை அதிகம் கொடுத்து வாங்கினா கையைக் கடிச்சுடுமே''
க.நாகமுத்து,
திண்டுக்கல்.

• (துறையூர் தாலுகா எரகுடியில் ஒரு வீட்டில் மனைவியும் கணவனும்)
"ஏங்க முதன்முதலாக சூப்பரா ஒரு ஸ்வெட்டர் பின்னியிருக்கேன். பாராட்டவே மாட்டீங்களா?''
"பின்னிட்டே.... போ''
ஆர்.ராஜேஸ்வரி, எரகுடி.

எஸ்எம்எஸ்
கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.
மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.
அழுகையில் ஒருவரையும் நம்பாதே.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!
இரண்டு லட்ச ரூபாய்க்கு...
கொள்ளுத் தாத்தா 200 ஏக்கர் வாங்கினார்.
தாத்தா 20 ஏக்கர் வாங்கினார்.
அப்பா 2 ஏக்கர் வாங்கினார்.
பேரன் 2 சென்ட் வாங்கினார்.
கொள்ளுப் பேரன் 2 சதுர அடிதான்
வாங்குவான் போலும்!
ஜி.வினோத்,
கிருஷ்ணாபுரம்.

அப்படீங்களா!
பெயின்ட் அடிப்பதற்கும் ரோபாட் வந்துவிட்டது. எவ்வளவு உயரமான கட்டடமானாலும் கீழே விழுந்துவிடும் பயமின்றி பெயின்ட் அடிக்கும் இந்த ரோபாட், ஐந்து ஆட்கள் செய்யும் வேலைகளை இது ஒன்றுமட்டும் செய்கிறது. மிக நுணுக்கமான சிறு பொருள்களின் மீதும் பெயின்ட் அடிக்கும் திறன் இதற்குண்டு.
மனிதர்களை விட மிக வேகமாகவும், ஓய்வு, இடைவெளி இன்றியும் பெயின்ட் அடிக்கும் இந்த ரோபாட், மனிதர்கள் பயன்படுத்துவதை விட, 20 சதவீதம் பெயின்ட்டை மிச்சப்படுத்துகிறதாம். முன்னும் பின்னும் பல கோணங்களில் பெயின்ட் அடிக்கும் திறன் இந்த ரோபாட்டுக்கு உண்டு. கட்டடங்களில் பெயின்ட் அடிக்கும்போது, ஜன்னல் இருக்கும் பகுதி வந்தால், ஒரு துளி பெயின்ட் கூட ஜன்னலில் படாமல் அடிக்கும் திறமையும் இந்த ரோபாட்டுக்கு உண்டு. இந்த ரோபாட்டை உருவாக்கியிருப்பவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த ELID Technology Inter
national Utßm Nanyang Technological University - ஐச் சேர்ந்தவர்கள்.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com