மைக்ரோ கதை

"துணியெல்லாம் சரியாவே துவைக்கிறதில்லே நீ... அம்மா துவைச்சாங்கன்னா, துணி "பளிச்'சுன்னு இருக்கும்''
மைக்ரோ கதை

"என்ன சமையல் செஞ்சிருக்கே? எங்க அம்மா எவ்வளவு ருசியா சமைப்பாங்க தெரியுமா?''
"துணியெல்லாம் சரியாவே துவைக்கிறதில்லே நீ... அம்மா துவைச்சாங்கன்னா, துணி "பளிச்'சுன்னு இருக்கும்''
"காலையிலே கோலம் போடுவாங்க பாரு. தெருவுல எல்லாரும் பாராட்டுவாங்க. நீயும் இருக்கியே... நாலு இழை ஒழுங்கா இழுக்கத் தெரியலே''
கணவன் எதற்கெடுத்தாலும் தன் அம்மாவோடு  தன்னை ஒப்பிட்டு  குறை கூறுவதை மனைவி பொறுத்துக் கொண்டே வந்தாள். 
தனது மாமியார் திறமைசாலியாக இருக்கலாம். அதற்காகத் தன்னை எதற்கு மட்டம் தட்டணும்? என்று நினைத்தாள்.
ஒருநாள் கணவன்,  "நீ என்ன பாத்திரம் தேய்க்கிறே? எங்க அம்மா பாத்திரம் தேய்ச்சாங்கன்னா...''
அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் மனைவி.
" என்னங்க... நானும் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு ரொம்பநாளா நெனைச்சுக்கிட்டிருக்கேங்க.   நீங்க இன்னும் எத்தனை வருஷத்துக்கு வெறும் கிளார்க்காகவே இருப்பீங்க. எங்க அப்பா மாதிரி எப்ப மானேஜராகப் போறீங்க?''
திடுக்கிட்டுப் பார்த்த கணவன், அதன் பின் மனைவியைக் குறை சொல்வதை விட்டுவிட்டான்.
சி.ரகுபதி, போளூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com