மைக்ரோ கதை

தேவராஜ் தற்பெருமைக்காரன். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தன் கழுத்துச் செயின் தெரிய சட்டையின் மேல் பட்டன்களைப் போடமாட்டான்.
மைக்ரோ கதை

தேவராஜ் தற்பெருமைக்காரன். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தன் கழுத்துச் செயின் தெரிய சட்டையின் மேல் பட்டன்களைப் போடமாட்டான். கையில் பிரேஸ்லெட்டைப் போட்டு ஆட்டி ஆட்டிக் காட்டுவான்.
ஒருமுறை வாயின் முன்பக்கம் உள்ள ஒரு சொத்தைப் பல்லைப் பிடுங்கிவிட்டு, தங்கப் பல் கட்டிவிட்டு வந்தான். தங்கப் பல் தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
நிறைய இஞ்சி வாங்கி, அதைத் தெருவில் கூவி விற்றான். கூவும் போது தங்கப் பல் தெரிந்தது.
இவ்வாறு இஞ்சி விற்று வரும் நாளில், ஒரு முறை திருடன் ஒருவன், தேவராஜின் எல்லா நகைகளையும் தங்கப்பல் உட்பட வழிப்பறி செய்துவிட்டு ஓடிவிட்டான்.
வாங்கிய இஞ்சியெல்லாம், விற்காவிட்டால் வீணாகிவிடுமே, இஞ்சி என்று கூவினால் ஓட்டைப் பல் தெரியுமே என்று கவலைப்பட்டான் தேவராஜ்.
அப்போது அவனுடைய நண்பன் ஓர் ஐடியா கொடுத்தான்:
"கவலைப்படாதே. பத்துநாள் பொறுத்திரு. இஞ்சியெல்லாம் சுக்காகிவிடும். சுக்கு என்று கூவினால் ஓட்டைப் பல் தெரியாது''
செல்.பச்சமுத்து, சென்னை-52.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com