பேல்பூரி

தேவைக்கேற்ப புதிய புதிய கருவிகளை உருவாக்கிக் கொள்பவன் மனிதன். தொலைதூரச் சுற்றுலாப் பயணங்களில் திடீரென்று குறுக்கிடும் நதியை,
பேல்பூரி

கண்டது
• (திருச்சி செளக் பகுதியில் ஒரு வீட்டின் முன்புறமிருந்த கரும்பலகையில்)
 உயரம்னா எவரெஸ்ட்
உயரணும்னா நோ ரெஸ்ட். 
ஞானசுந்தரம், திருச்சி-2.

• (சீர்காழியில் சட்டநாதர் காலனியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில்)
எங்க பாசம்
ஊரே பேசும்  
ரா.ராஜதுரை, சீர்காழி.

• (திருச்சிக்கு அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
எட்டரை  
பெ.முத்து, திருச்சிற்றம்பலம்.

• (திருநெல்வேலி - நாகர்கோயில் செல்லும் பாதையில் ஒரு காபிக் கடையின் பெயர்)
ஓட்டைப் பானை காபி ஷாப் 
என்.கோமதி, பெருமாள்புரம், 
திருநெல்வேலி.

கேட்டது
• (கோவில்பட்டியில் ஏடிஎம் கியூவில் நிற்கும் இருவர்)
"இரவு பகலா அடிச்சும் 500 ரூபாய் நோட்டை இன்னும் புழக்கத்துக்கு கொண்டு வர முடியலையாம்''
"நம்ம சிவகாசிக்காரங்க கிட்டே ஆர்டர் கொடுத்தால் ஒரே நாளில் அடிச்சுக் குடுத்துருவாங்களே''
 எஸ்.மோகன், கோவில்பட்டி.

• (ராமநாதபுரம் அரண்மனை முன்பாக இரு இளைஞர்கள்)
"டேய் மச்சி... உனக்குத்தான் இன்னும் கல்யாணம் ஆகலையே... அதுக்குள்ளே எதுக்குப் பணம் சேர்க்க ஆரம்பிச்சிட்டே?''
"இது வருங்கால ஒய்ஃப்பு நிதிடா... பேசாமப் போவியா?''  
கே.முத்தூஸ், ராமநாதபுரம்.

எஸ்எம்எஸ்
வரலாறு ஜெயித்தவரையும் பதிவு செய்யும்.
தோற்றவரையும் பதிவு செய்யும்.
வேடிக்கை பார்ப்பவரை,
ஒரு போதும் பதிவு செய்யாது.
ஜி.கருப்பசாமி, நம்புதாளை.

யோசிக்கிறாங்கப்பா!
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு,
அழைப்பிதழ் மூலம் ஊரே அழைக்கப்பட்டு,
சடங்கு, சம்பிரதாயத்தைக் 
கடைப்பிடித்து
மந்திரம் ஓதி மணம் 
செய்து கொண்டாலும்,
மனம் ஒத்துப் போகவில்லை 
என்பதை
நீதிமன்றத்தின் மூலமாகவே 
சொல்ல முடிகிறது.
மு.பா.சாரதி, சென்னை-100.

அப்படீங்களா!
தேவைக்கேற்ப புதிய புதிய கருவிகளை உருவாக்கிக் கொள்பவன் மனிதன். தொலைதூரச் சுற்றுலாப் பயணங்களில் திடீரென்று குறுக்கிடும் நதியை, ஏரியை கடப்பது எப்படி? அதற்கு உதவுகிறது இந்தப் படகு.
நீரில் மிதக்கும் இந்தப் படகை, கரைக்கு வந்ததும் மூன்று நான்காகச் சுருட்டி கைப் பையில் வைத்துக் கொண்டு நீங்கள் நடந்து செல்லலாம்.
2.8 மீட்டர் நீளமுள்ள இந்தப் படகு ஒரு பை போன்றது. அதைப் பிரித்து, தேவையான பிரேம்களை குறுக்காகவும் நெடுக்காகவும் பொருத்தி, சைக்கிளுக்குக் காற்றடிப்பதுபோல அடித்தால், 5 நிமிடத்தில் படகு தயார். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ஹோலி ஸ்பிரிங்ஸ் என்ற நகரில் உள்ள  The Folding Boat Company என்ற நிறுவனம் இந்தப் படகைத் தயாரித்துள்ளது.
என்.ஜே., 
சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com