பேல்பூரி

"கண்ணை நல்லா உருட்டி முழிச்சு, பல்லை நறநறன்னு கடிச்சிக்கிட்டு பெருமூச்சு விட்டு என்னைப் பாக்குறியே? அதான்'
பேல்பூரி

கண்டது
• (திருச்சி புத்தகக் கண்காட்சி ஒன்றில்)
புத்தகம்...
தொட்டால் காகிதம்.
படித்தால் ஆயுதம்.
இரா.வசந்தராசன், கல்லாவி.

• (திருவாரூர் மாவட்டம்  விளத்தூர் ஊராட்சி 
பகுதியில் உள்ள ஓர் ஊரின் பெயர் )
பாம்பு புகுந்த நல்லூர்
  மு.இளங்கோவன், மன்னார்குடி.

• (கோவை புகைவண்டி நிலையத்துக்கு அருகில் உள்ள ஓர் உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் )
கேட்பவை எல்லாம் கிடைத்துவிட்டால்...
வாழ்க்கையில் ரசனை இல்லை;
கிடைப்பவை எல்லாம் நிலைத்துவிட்டால்,
கேட்பதற்கு எதுவும் இல்லை.
 வி.ரேவதி, தஞ்சை.

• ( சத்தியமங்கலம் - கோவை  சாலையில்  உள்ள ஓர் ஊரின் பெயர்)
தங்க நகரம்
 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

கேட்டது
(கோவிலாம்பூண்டி எம்.எம்.ஐ. நகரில் ஒரு வீட்டில் கணவனும், மனைவியும்)
"என்ன மீனாட்சி சீரியல் பார்வை பாக்குற?'
"அப்படீன்னா?'
"கண்ணை நல்லா உருட்டி முழிச்சு, பல்லை நறநறன்னு கடிச்சிக்கிட்டு பெருமூச்சு விட்டு என்னைப் பாக்குறியே? அதான்'
பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

• ( நெய்வேலியில் உள்ள ஏடிஎம் வாசலில் இருவர்)
"என்ன சார்... இவ்வளவு பெரிய வரிசை நிற்குது... இப்போ போய் நிற்கிறீங்களே''
"என்ன பண்றது சார்? பணத் தேவை வரிசையைவிட பெரிசா இருக்கே''
 கி.ரவிக்குமார், நெய்வேலி.

யோசிக்கிறாங்கப்பா!
பொருள்களுக்கு விளம்பரங்கள்...
வியாபார உத்தி.
புரிந்து கொள்ளாமல் ஏமாறுவது 
நம்முடைய புத்தி. 
 மு.பெரியசாமி, 
திருத்துறைப்பூண்டி.

எஸ்எம்எஸ்
உன்னிடம்  பொய் சொல்பவன்,
உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்
 குலசை நஜ்மூதீன், காயல்பட்டினம்.

அப்படீங்களா!
இப்போது நிறைய மாடல்களில் செல்போன்கள் வந்துவிட்டன. வெறும் 500 ரூபாய்க்குக் கூட செல்போன்கள் விற்கப்படுகின்றன. ஆனால் இஸ்ரேல் நாட்டின் சிரின் லேப்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் சோலாரின் என்ற   செல்போனின் விலை ரூ.9 லட்சம்.
ரகசியத்தைப் பாதுகாக்க உலக அளவில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும்  தொழில்நுட்பம், இந்த செல்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். 
24 மெகா பிக்சல் கேமரா,  கைவிரல் சென்சார்,  128 ஜிபி சேமிப்பு, 4ஜிபி   தஅங ,   23.8ஙட ழ்ங்ஹழ் ஸ்ரீஹம்ங்ழ்ஹ  என பல கூடுதலான சிறப்பம்சங்கள் நிறைந்துள்ள இந்த செல்போன், சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த செல்போனுக்குள் உள்ள பாகங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 என்றால் நம்ப முடிகிறதா?
   என்.ஜே.,  சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com