சிரி... சிரி... சிரி... சிரி... 

அந்த மேஜிசியன் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெட்டியில போட்டு குலுக்கி புது 2000 ரூபா நோட்டுகளை வரவழைக்கிறார்.''
சிரி... சிரி... சிரி... சிரி... 

* "பிச்சைக்காரனை வீட்டுக்குள்ள கூப்பிட்டு சாப்பாடு போடுறாரே...?''
"எதுக்கு?''
"அவன்தானே 500, இரண்டாயிரத்துக்கு அப்பப்ப சில்லறை கொடுக்குறான்...!''
எ.எல்.சண்முகம், கண்டனூர்.

* "2000 ரூபா நோட்டு கலர்ல புடவை கட்டிக்கிட்டு எங்கே போறே?''
"வேற எங்கே?  பேங்குக்குப் போறேன் அத்தே''
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்.

* "இந்த "மேஜிக்ஷோ'வில கூட்டம் அலைமோதுதே, ஏன்?''
"அந்த மேஜிசியன் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெட்டியில போட்டு குலுக்கி புது 2000 ரூபா நோட்டுகளை வரவழைக்கிறார்.''

* "பொண்ணுக்கு எவ்ளோ நகை எதிர்பார்க்கிறீங்க?''
"கவர்மென்ட் "கோட்டா'படி 500 கிராம் போடுங்க!''
கு.அருணாசலம், தென்காசி.

* "என் கணவர் சரியான சந்தேகப் பேர்வழி''
"எப்படிம்மா சொல்றே?''
"என் போட்டோவை பீச்ல சுண்டல் விற்கிறவனிடம் காட்டி, என்னை வேறு யாருடனாவது பீச்ல பார்த்திருக்கிறாயான்னு கேட்டிருக்கிறார்...!''
கே.ரெஞ்சி, ரெட்டியபட்டி.

* "சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை நான் சாப்பாட்டுக்கு பின்னாடி குடிச்சுட்டேன்.''
"அடடா... அப்புறம்?''
"மறுபடியும் ஒருதடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு.''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

* "கான்வென்ட்ல படிச்சதுனால இங்கிலீஷ்காரர் மாதிரியே பேசுவார்...!''
"இங்கிலீசையா...?''
"இல்ல... தமிழை...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.

* ஆசிரியர்:  தேர்வு எழுத கொஸ்டின் பேப்பர் ஆன்ஸர் பேப்பர் எல்லாம் கொடுத்தாச்சு. சந்தேகம் ஏதாவது இருந்தா கேட்கலாம்
மாணவன்:  கொஸ்டின் பேப்பர் கொடுத்தீங்க. அதுல கொஸ்டின் இருக்கு. ஆன்ஸர் பேப்பர் கொடுத்தீங்க, அதுல ஆன்ஸர் இல்லையே சார்? 
ஆசிரியர்: !!!!
இரா. பாரதிதாசன், தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com