பேல்பூரி

ஆலன் இஸ்டாஸ். வயது 60. கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அவர் செய்த சாதனையோ... வேறு துறையில். 
பேல்பூரி

கண்டது
* (காரைக்குடியில் ஒரு வீதியின் பெயர்)
காலவாய்ப் பொட்டல்
எ.எல்.சண்முகம், கண்டனூர்.

* (நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி முன் உள்ள ஒரு ரெடிமேட் கடையின் பெயர்)
மச்சான்
கே.பிரபாவதி, 
மேலகிருஷ்ணன்புதூர்.

* (மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
 குட்டிமேய்க்கிபட்டி
ந.கி.மதுபிரசாத், கொடுவை.

* (ஒரு முதியோர் இல்லத்தில்)
DO AS MUCH AS YOU CAN
FOR AS MANY AS YOU CAN
மல்லிகா அன்பழகன், சென்னை-78.

கேட்டது
(மயிலாடுதுறையில் ஒரு வங்கியில்)
கேஷியர்: அய்யா, பான் கார்டு எடுத்துட்டு வாங்க. அப்பதான் பணம் எடுக்கலாம்.
விவசாயி: என் பொண்டாட்டி பேரு பானு இல்லங்க. காமாட்சிங்க. அவளுக்குக் கார்டு கிடையாதுங்க.
க.கலா, 
காகிதப்பட்டறை.

• (ஸ்ரீ ரங்கத்தில் ஓர் இனிப்புக்கடையில்)
வாடிக்கையாளர்: சார் போன மாசம் ஒருநாள் உங்க கடையிலே பால் அல்வா வாங்கினேன். ரொம்ப அருமையா டேஸ்ட்டா இருந்துச்சு... இப்ப இருக்குங்களா?
கடைக்காரர்: அது இல்ல சார்... இன்னிக்குக் காலைல வந்த பால் அல்வாதான் இருக்கு.
த.சிவக்குமார், ஸ்ரீரங்கம்.

யோசிக்கிறாங்கப்பா!
மழலைகள் ஒருபோதும் 
"கெட்ட' வார்த்தைகளைப் 
பேசுவதில்லை.
அவர்கள் காதில் 
"கேட்ட' வார்த்தைகளையே 
பேசுகிறார்கள். 
                ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

எஸ்எம்எஸ்
கவலையின் தொடக்கம்...
நம்பிக்கையின் முடிவு.
நம்பிக்கையின் தொடக்கம்...
கவலையின் முடிவு.
நெ.இராமன், சென்னை-74.

அப்படீங்களா!
ஆலன் இஸ்டாஸ். வயது 60. கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அவர் செய்த சாதனையோ... வேறு துறையில். 
 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் என்ற இடத்திலிருந்து பலூன் ஒன்றில் ஏறி உயரே பறந்தார் ஆலன். உயரே... உயரே... 1,35,890 அடி உயரம் வரை, அதாவது 41.42 கி.மீ. உயரம் வரை பறந்தார். அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே குதித்தார். பாராசூட் விரிய, நான்கரை நிமிடத்தில் பூமியை வந்தடைந்தார். அதாவது மணிக்கு 1321 கி.மீ.வேகத்தில் வானிலிருந்து கீழே இறங்கிவந்தார். மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பைக்கில் பறந்தால் எப்படியிருக்கும் என்று அனுபவித்துப் பார்த்தவர்கள் கூட... மணிக்கு 1321 கி.மீ. வேகம் என்பதைக் கற்பனை செய்ய முடியாமல், தலை சுற்றி நிற்பார்கள். 
இது இதேபோன்று இதற்கு முன்பு குதித்தவர்களின் சாதனையை விஞ்சிய ஒன்றாகும். இந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்டுவிடாதீர்கள். 
என்.ஜே., சென்னை-69.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com