ஆகாஷ் அம்பானி ஒரு சிறந்த கால்பந்து விசிறி!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷுக்கு கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு.  ஆர்செனல் அணியின் தீவிர  ரசிகர்.
ஆகாஷ் அம்பானி ஒரு சிறந்த கால்பந்து விசிறி!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷுக்கு கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு.  ஆர்செனல் அணியின் தீவிர  ரசிகர்.  ஆனால் சமீபத்தில் இந்த அணி, லிவர்ஃபூல் அணியிடம், 4-0 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் ஆர்செனல் அணியின்  ரசிகர்கள் மனம் உடைந்து போயினர்.  இவர்களில் ஆகாஷ் அம்பானியும் ஒருவர். ஆகாஷ் அம்பானி, தனியாக கால்பந்து விளையாடி, ரசிக்க ஏதுவாய், குடும்பத்திற்கென்று தனி கால்பந்து மைதானமே உண்டு.
2016- ஆம் ஆண்டு ஆர்செனல் அணியின்  முன்னால் ஃ பார்வேர்ட் வீரர் தியரிஹென்றி மும்பைக்கு வந்திருந்தார்.
அப்போது ஆகாஷ் அம்பானியுடன் இணைந்து, அவருடைய மைதானத்தில்  கால்பந்து விளையாடினார்.
மேலும் தியரி ஹென்றிக்கு  எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் ஒரு  தனி பாக்ஸ் வசதி உண்டு. அதில் அமர்ந்து போட்டியை ரசிக்க ஆகாஷ் அம்பானியை அழைத்துள்ளார்.  பெரிய மனிதர்கள் என்றால் நட்பு தேடி வரும்! 
-ராஜிராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com