டோல் கேட் ... எரிச்சலடையத் தேவையில்லை!

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ஏகப்பட்ட டோல் கேட்டுகள் வரிசையாக வருவதைப் பார்த்து எரிச்சலடையும் நிலை நம் எல்லாருக்குமே ஏற்படுவதுண்டு.
டோல் கேட் ... எரிச்சலடையத் தேவையில்லை!

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ஏகப்பட்ட டோல் கேட்டுகள் வரிசையாக வருவதைப் பார்த்து எரிச்சலடையும் நிலை நம் எல்லாருக்குமே ஏற்படுவதுண்டு. ஏனென்றால் டோல்கேட்டுகளில் வரிசையில் நின்று பணத்தை கொடுத்து ரசீதைப் பெற்று செல்வதற்குள் போதும்,போதும் என்றாகிவிடும்.

மேலும் இரு வழிக்கான ரசீதைப் பெற்றால் அதை பாதுகாப்பாக வேறு வைத்திருக்க வேண்டும்.

அந்த சிரமங்களைப் போக்க ndian Highways Management Company Limited (IHMCL)  Utßm National Payment Corporation of India (NPCI) ஆகியவை இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளன. Radio frequency Identification (RFID) technology என்ற நவீன தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் நாம் நேரத்தை விரயம் செய்யாமல் விரைவாக சென்று இலக்கை அடைய முடியும். மேலும் டோல் கேட்டுகளில் காத்திருக்கும் காலத்தில் ஏற்படும் எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும். தற்போது 180 - க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெறுவது எப்படி?
டோல்கேட்டுகளில் உள்ள Point of Sale (POS) மையங்களிலோ, அல்லது அதற்கென உள்ள ஏஜென்சிகள் மூலமாகவோ நாம் பாஸ்டேக் அட்டைகளைப் பெற முடியும். இந்த மையங்கள் குறித்த பட்டியல் இணைய தளத்தில் உள்ளது (http://www.fastag.org/). மேலும் வங்கிகள் மூலமும், ஆன்-லைன் மூலமும் 
FASTag அட்டைகளைப் பெற முடியும்.

இந்த FASTag கணக்கை தொடங்குவதற்கு ரூ.200 பெறப்படுகிறது. அதன் பின் நாம் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கைபேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது போல் தேவைக்கேற்றவாறு நாம் டாப்-அப் செய்து தொள்ளலாம்.

வாகனத்தின் Registration Certificate (RC), வாகன உரிமையாளரின் மார்பளவு புகைப்படம் மற்றும் வாகன உரிமையாளரின் KYC விவரங்கள் தேவை. தனி நபரின் சொந்த வாகனம் என்றால் அவரின் அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான விபரங்கள் அடங்கிய ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல் தேவை. FASTag பெற்ற பின்னர் வாகனம் ஓட்டும் பொழுது டோல்கேட்டுகளில் சரிபார்த்தலுக்காக கேட்கப்படக்கூடும் என்பதால் அசலையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வாகனம் கார்ப்பரேட் நிறுவனத்துக்குரியது என்றால் FASTag பெறுவது தொடர்பாக இணையத்தை பார்வையிடலாம். 

உரிய முறைகளை பயன்படுத்தி FASTag கணக்கைத் தொடங்கியவுடன், நிறுவன பிரதிநிதி FASTag வில்லையை நமது வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தி விடுவார். இனி நாம் எந்தவொரு டோல்கேட்டிலும் வரிசையில் நிற்காமல் அதற்கென்று உள்ள எலக்ட்ரானிக் தானியங்கி டோல்கேட்டுகள் வழியாக விரைவாக சென்று விடலாம். அந்த டோல் கேட்டில் செலுத்த வேண்டிய பணம் நமது பாஸ்டேக் கணக்கிலிருந்து உடனடியாக கழிக்கப்பட்டு அது தொடர்பான விபரம் நமது கைபேசிக்கு வந்துவிடும். அதே சாலையில் நாம் 24 மணி நேரத்துக்குள் திரும்ப வந்தால் தானாகவே 2 வழித்தொகை (2 Way) கழிக்கப்படும். மேலும், இது தொடர்பான ஸ்டேட்மென்ட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நமக்கு அனுப்பப்படும். அல்லது இணையதளத்துக்குள் சென்று நமது கணக்கை திறந்து பார்த்தால் முழு விவரத்தையும் அறிய முடியும். 

காசோலை, ஆன்-லைன்(through Credit Card/ Debit Card/ NEFT/ RTGS or through Net Banking.) மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். குறைந்த பட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். மாதம் முழுவதும் பயன்படுத்துவோருக்கு என சில சலுகைகள் உள்ளன. அதை வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்போர் ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியான FASTag கணக்கை தொடங்க வேண்டும். ஒரு வாகனத்துக்கு இரண்டு FASTag கணக்கு வைக்கக் கூடாது. டோல் கேட்டில் சரியாகத்தான் பணம் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை www.nhtis.org என்ற இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இது போன்ற நவீன வசதிகளுடன் கூடிய FASTag  டோல்கேட்களை மாநில சாலைகளிலும் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com