பேல்பூரி

செல்போன் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்ட செய்தியை அடிக்கடி படிக்கிறோம்; பார்க்கிறோம். 
பேல்பூரி

கண்டது
• (வந்தவாசியில் உள்ள ஒரு சலூனின் பெயர்)
FINGER TOUCH
FAMILY SALOON
டி.தாமினி, திருவண்ணாமலை.

• (திருச்சி இரட்டை வாய்க்கால் - வயலூர் சாலையில் ஒரு செருப்புக் கடையில்)
உங்கள் பாதங்களில் எங்கள் வாழ்க்கை
கி.ரவிக்குமார், நெய்வேலி.

• (மதுரை தெற்குவாசல் பகுதியில் ஓர் ஆட்டோவில்)
எல்லாருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்றால்...
நீ மனிதனாக இருக்கக் கூடாது.
பணமாக இருக்க வேண்டும்.
வெங்கிமலை மைந்தன், 
சொக்கநாதபுரம், மதுரை.

• (திருநெல்வேலி அழியாபதீஸ்வரர் கோயிலில்)
மனம் அமைதி அடைய,
செல்ஃபோனை அமைதிப்படுத்தவும்
க.சரவணகுமார், நெல்லை.

கேட்டது
• (அறந்தாங்கியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே இருவர்)
"என்னப்பா குமார்... உன் பையன் ஐடி கார்டுலே உன் போன் நம்பர் தப்பா இருக்குது... கவனிக்கலையா?''
"நான் பார்த்துட்டேன். பீஸ் கட்ட லேட்டாச்சுன்னா ஸ்கூல்ல இருந்து நூறு போன் பண்ணி உயிரையெடுப்பாங்க. இப்ப நிம்மதியா இருக்கேன். கண்டுக்காதே''
சுப.காளிதாசன், நீர்விளங்குளம்.

• (சென்னை மதுரவாயலில் வீட்டின் உரிமையாளரும், தெருவில் பந்து விளையாடிய பையனும்)
"ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரே தொல்லையாப் போச்சு. தெருவிலே விளையாடுற பந்தை வீட்டுக்குள்ளே போட்டுற வேண்டியது. அதை எடுத்துத் தாங்கன்னு அடிக்கடி உயிரை எடுக்குறது...''
"ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தானே அங்கிள் கேட்குறோம்?''
கணேசன், மதுரவாயல்.

எஸ்எம்எஸ்
அளவோடு இருக்க வேண்டியது ஆசை;
அளவில்லாமல் இருக்க வேண்டியது அன்பு.
ஆர்.தனம், திருச்சி-2

யோசிக்கிறாங்கப்பா!
இளமை தவறான பாதையை நம்புகிறது...
அனுபவம் சரியான பாதையையும் சந்தேகப்படுகிறது.
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

அப்படீங்களா!
செல்போன் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்ட செய்தியை அடிக்கடி படிக்கிறோம்; பார்க்கிறோம். 
ரொம்ப நேரம் பேசினால் வெடித்துவிடும் என்று சிலர் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.
செல்போன் பேட்டரி வெடிப்பதற்கு முக்கியமான காரணம், அதை அதிக அளவில் - சார்ஜ் ஆன பிறகும் கூட - தொடர்ந்து அதில் சார்ஜ் ஏற்றுவதுதான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலருடைய செல்போன் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்திருக்காது. கொஞ்சம்தான் குறைந்திருக்கும். ஆனாலும் அவர்கள் சார்ஜ் ஏற்றுவார்கள். அதனாலும் பேட்டரி வெடிக்கக் கூடிய அபாயம் உண்டு.
செல்போன் பேட்டரி வெடிக்காமலிருக்க ஒரு புதிய செல்போன் பேட்டரியை LITHIUM-ION-ஐ கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். 
இந்த பேட்டரியில் பேட்டரியின் இருதுருவங்களையும் பிரிக்கக் கூடிய மெல்லிய பிளாஸ்டிக்கைப் பொருத்தியிருக்கிறார்கள். சாதாரண பேட்டரியில் அதிக சார்ஜ் செய்யும்போது, இரு துருவங்களுக்கு இடையே உள்ள பகுதிகள் மாவு போல உதிர்ந்துவிடுவதால் பேட்டரியில் உள்ள மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, பேட்டரி வெடித்துவிடுகிறதாம். 
இந்த புதிய பேட்டரி தற்போது ரோபாட்டுகளை இயக்கப் பயன்படுகிறதாம். 
என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com