நலம் தரும் நந்த சப்தமி! 

கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி (9.12.2017) நந்த சப்தமி! இந்நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
நலம் தரும் நந்த சப்தமி! 

கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி (9.12.2017) நந்த சப்தமி! இந்நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. கோமாதாவான பசுவை வழிபடுவது குறித்து உள்ள சுலோகம்: 
" காம் சத்ருஷ்டவா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ பிரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபாவஸுந்தரா
ஸர்வ காமதுகே தேவி ஸர்வதீர்த்தா பிஷேசினீ
பாவனே ஸுரபிஸ் ரேஷ்டே தேவிதுப்யம் நமோஸ்துதே'
- கோ ஸ்துதி
பொருள்: தெய்வப்பிறவியான பசுவை வணங்கி, அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும். நற்குணங்கள் நிரம்பிய அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். இந்த வழிபாடு அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மை பரிசுத்தம் செய்யக் கூடியவள் இந்தப் பசு. கேட்டதையெல்லாம் அருளும் காமதேனுவாகத் துலங்கும் கோமாதாவே உன்னை வணங்குகிறேன்.
கோ பூஜையை முறையாக செய்ய இயலாதவர்கள், பசுவின் கழுத்திலும் தலையிலும் தடவிவிட்டு, பின்புறம் தொட்டு நமஸ்காரம் செய்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். 
காரணம்: பசுவின் கழுத்திலும் தலையிலும் அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகள் வாசம் செய்கின்றன. மேலும், பசுவின் உடலில் முக்கோடி தேவர்களும் தெய்வங்களும் வாசம் செய்வதுடன் கோமயம் வெளிவரும் பகுதியில் ஸ்ரீ லட்சுமி தேவி வாசம் செய்வதாகவும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே, பசுவை வழிபட்டு புல்லும் நீரும் வாழைப்பழங்களும் அளித்தால் யாகம் செய்த பலன்கள் கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
- டி.ஆர். பரிமளரங்கன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com