புத்தாண்டை ஆசீர்வதித்து தரும் கர்த்தர்!

நீதியும் கருணையும் அன்புமுள்ள பேரரசன் முன்பு தீர்ப்புக்காக கைதியாக பிடிப்பட்ட கொள்ளையன் ஒருவன் நிற்க வைக்கப்பட்டான்.
புத்தாண்டை ஆசீர்வதித்து தரும் கர்த்தர்!

நீதியும் கருணையும் அன்புமுள்ள பேரரசன் முன்பு தீர்ப்புக்காக கைதியாக பிடிப்பட்ட கொள்ளையன் ஒருவன் நிற்க வைக்கப்பட்டான். அவன் குற்றமோ மிக கொடியது. கொலை, கொள்ளை, திருட்டு என எண்ண முடியாத கொடும் குற்றங்கள். நிச்சயம் மரண தண்டனையாக தீர்வு கிடைக்கும். 
பேரரசன் அவனை உற்று பார்த்தார். "உன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது, மரண தண்டனை நிச்சயம். ஆனால் நான் ஒரு சந்தர்ப்பம் தருகின்றேன். நம் நாட்டு எல்லையில் நமது எதிரிகள் மிக கடுமையாக நம் நாட்டுக்கு எதிராக போர் புரிகின்றனர். நமது நாட்டு போர் படையால் அவர்களை வெல்ல முடியவில்லை. எனவே நமது நாட்டு படையை வழிநடத்தி போரிடு. தோற்றால் மரணம்; வெற்றி பெற்றால் நீ, நம் நாட்டின்தளபதி'' என்றார். கொள்ளையன் தன் நாட்டுக்காக போர் புரிய சம்மதித்தான். போரில் அவனது வீரம் கண்டு, படையினர் வீரம் கொண்டு போரிட்டனர். வெற்றி அவர்களுக்கு கிடைத்தது. எதிரி நாடு பேரரசன் வசமாயிற்று. பேரரசன் அவனை மன்னித்து தளபதியாக நியமித்தான்.இது ஒரு உவமைக் கதை ஆனாலும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
2017 ஆம் ஆண்டு கடந்து போனது. 2018 நம்முன், நாம் தான் அன்புமிக்க பேரரசனாகிய கர்த்தர் முன் நிற்கின்றோம். அன்புமிக்க பேரரசன் நம்மை கணக்கு கேட்க போவது இல்லை. நம் முன் நிற்கும் எதிரி தீயோனை வெல்ல 2018 ஆம் ஆண்டை ஒரு வாய்ப்பாக கொடுத்திருக்கிறார். நம் ஆற்றல், அறிவு, திட்டமிடுதல், பணியில் அர்ப்பணிப்பு, அன்பு, பக்தியைக் கொண்டு 2018 -ஐ வெற்றி ஆண்டாய் ஆசிர்வதிக்கும் ஆண்டாய் வாய்ப்பு கொடுக்கின்றார். இறைவனுக்காக போரிடலாம். நம் எதிரி சாத்தான் நம்மை வெற்றி பெறாதபடி செயல்படுவோம்.
வேதாகமத்தில் (2 பாகமம் 28:1-14) தம்மக்களுக்கு கொடுக்கும் புத்தாண்டின் ஆசீர்வாதங்களை கர்த்தர் சொல்லுகிறார். "நீ உன் தேவனாகிய கர்த்தரின் சந்ததுக்கு (சொல்லுக்கு) உண்மையாக கீழ்ப்படிந்தால் பூமியில் சகலரிலும் நீ மேன்மையாக இருப்பாய். நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனி (பிள்ளைகள்) உன் நிலம் (மனைவி) ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடை மாப்பிசைகிற உன் தொட்டியும் (சமையல் அறை) ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் பகைவர் ஓடி போவார்கள். உன் களஞ்சியங்களும் (வருமானம்) ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன்னை பரிசுத்த ஐனமாக நிலை நிறுத்துவார்.
ஏற்ற காலத்தில் மழை பெய்யும். தம் பொக்கிஷ அறையை திறந்து கொடுப்பார். கடன் கொடுப்பாய், கடன் வாங்க மாட்டாய். உன்னை கீழ் ஆக்காமல் மேலாக்குவார். சுகம், சமாதானம், நோயில்லா வாழ்வு, வளர்ச்சியை கொடுப்பார்'' எனவே, 2018 ஆம் ஆண்டு ஆசீர்வாதத்தின் ஆண்டாக நமக்கு அருளுவார்.
கர்த்தரின் கட்டளைகள் நம்மை நெறிபடுத்தும் சன்மார்க்கம். மற்றவருக்கும் துன்பம் தராத மகிழ்வான குடும்ப வாழ்வு தரும். இயேசு, ஆண்டவரின் போதனைகள் நம்மை வாழவைக்கும்; சன்மார்க்க வாழ்வு தரும்.
- தே. பால் பிரேம்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com