நிகழ்வுகள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி மகாசுவாமிகள் காட்டிய வழியில் நமது இந்துமத தர்ம நெறியில் நடந்து, ஸனாதன தர்மத்தை கடைபிடித்து

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை
ஸ்ரீ காஞ்சி காமகோடி மகாசுவாமிகள் காட்டிய வழியில் நமது இந்துமத தர்ம நெறியில் நடந்து, ஸனாதன தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்த மகான் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.  இவர்தம் வாழ்நாளில் செய்துள்ள ஸ்ரீமத் பாகவத, ஸ்ரீமத் ராமாயண பாராயணங்கள் எண்ணற்றவை.  ஸ்ரீ குருவாயூரப்பனிடம் அளவற்ற பக்திகொண்ட இவர் ஸ்ரீ குருவாயூர் தலத்திற்கு 1963 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை பல முறைச் சென்று பக்தர்கள் முன்னிலையில் ஸ்ரீமத் பாகவத, நாராயணீய பாராயணமும் செய்திருக்கிறார். காஞ்சி மகாசுவாமிகளின் அன்பிற்கும் அருளுக்கும் பெரிதும் பாத்திரமானவர். இந்த மகானுடைய 13 ஆம் வருட ஆராதனை மகோத்சவம் திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள பழூர் அக்ரஹாரத்தில் உள்ள அதிஷ்டானத்தில் ஜனவரி -26 ஆம் தேதி நடைபெறுகின்றது.  அன்று காலை ஸ்வாமகளின் பஞ்சலோக விக்ரகத் திருமேனி அலங்காரத்ததுடன் வீதி வலம் வந்த பின், அதிஷ்டானத்தில் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளும், வைதீக காரியங்களும் நடைபெறுகின்றன. சுவாமிகளின் அபிமானிகள் அவசியம் இந்த வைபவங்களில் பங்கேற்கவேண்டும். பழூர் செல்ல திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்து வசதிகள் உள்ளது. 
தொடர்புக்கு: 9488 979201 / 99622 19944.
- வி. ஜானகிராமன்
மகா சுதர்ஸன ஹோமம்
காஞ்சி மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி சந்நிதியில் 16 ஆம் ஆண்டு மகா சுதர்ஸன ஹோமம் ஜனவரி -26 ஆலயம் தேதி காலை நடைபெறுகின்றது.  
தொடர்புக்கு: 90030 26602.
திருப்புகழ்த் திருப்படி விழா
வேலூர் மாவட்டம்,வாலாஜா வட்டம், கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள ஞானமலை முருகன் கோயிலில் ஜனவரி -28, 29 தேதிகளில் பல்வேறு வைபவங்கள் நடைபெற உள்ளன. ஜனவரி -28 ஆம் தேதி அகத்தியர் பசுமை உலகம் அறக்கட்டளை அமைப்பினரால் ஞானமலையில் மரக்கன்றுகள் நடும் பணி, ஏகதின லட்சார்ச்சனை, அருணகிரிநாதருக்கு அருட்காட்சி விழா, ஜனவரி -29 ஆம் தேதி திருப்படி பூஜை, பல்வேறு திருப்புகழ் சபை பங்கேற்கும் திருப்புகழ் திருப்படி விழா, ஞானவேலுக்கு அபிஷேகம், பூஜை, அன்னதானம் போன்ற நிகழ்வுகளை நடத்த ஞானச்ரம அறக்கட்டளை என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. 
தொடர்புக்கு: 94444 18526 / 90032 32722.
ஸ்ரீ ராஜமாதங்கி நவராத்திரி விழா
காஞ்சிபுரம் மாவட்டம், செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஸ்ரீமத் ஒளஷத லலிதா மஹா திரிபுரசுந்தரி ஸ்ரீ சக்ர ராஜசபை ஸ்ரீ பீடம் ஸ்ரீபாலா சமஸ்தானத்தில் ஸ்ரீ ராஜ மாதங்கி நவராத்திரி விழா ஜனவரி -27 இல் தொடங்கி பிப்ரவரி -6 வரை நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், ஸ்ரீ வித்யா மூலமந்திர ஜப கலச பூஜை, தேவி பாராயணங்கள், பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றது. பிப்ரவரி -5 ஆம் தேதி இக்கோயிலில் உள்ள அன்னை ஸ்ரீ பாலாவிற்கு படிக்கும் குழந்தைகள் தங்கள் கரங்களால் தேன் கலந்த பாலாபிஷகம் செய்யலாம்.  ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப சகஸ்ரநாம அர்ச்சனையிலும் பங்கேற்கலாம். இக்கோயிலில் கும்பாபிஷேகம் பிப்ரவரி -2 ஆம் தேதி வியாழனன்று நடைபெறுகின்றது. அன்று ஒளஷத லலிதாம்பிகைக்கு தைலகாப்பு செய்விக்கப்பட்டு புது புடவை அணிவிக்கப்படும்.  மகாபிஷேகம், நவ கலச ஹோமம், பாலா மூலா மந்திரம், 108 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 97899 21151 / 94453 59228.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com