நிகழ்வுகள்

கும்பகோணம் அருகில் செருகுடி கிராமத்தில் ஜுன் 26 ஆம் தேதியன்று மூன்று கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகில் செருகுடி கிராமத்தில் ஜுன் 26 ஆம் தேதியன்று மூன்று கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
காலை 6.30 மணி -ஸ்ரீ திரெüபதியம்மன் ஆலயம்.
காலை 9.00 மணி -ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில்.
காலை 10.00 மணி -ஸ்ரீ அமிர்தவள்ளி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
யாகசாலை பூஜைகள் ஜுன் 24 இல் தொடங்குகின்றன. ஜுன் 25 ஆம் தேதி மாலை நிஜ ஸர்ப்பம் (பாம்பு) கொண்டு ஸர்ப்பபூஜை நடைபெறுகின்றது.
வழித்தடம் : கும்பகோணம் - சென்னை சாலையில் கோவிலாச்சேரியிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது செருகுடி.
************
வரசக்தி விநாயகர்
சென்னை, நெசப்பாக்கம், அருள்மிகு வரசக்தி விநாயகர் திருக்கோயிலில் பரிவார தெய்வங்கள், மூலமூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், கொடிமரம், மகாமண்டபம், கருவறைவிமானம், அர்த்த மண்டபம் என ஆலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
நாள்: 30.6.2017, நேரம்: காலை 9.00 -10 .30 மணி.
*************
அருள்மிகு சிவந்தியப்பர்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், அருள்மிகு வழியடிமை கொண்ட நாயகி உடனுறை அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயிலில் ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள், கொடிமரம் போன்றவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
நாள்: 26.6.2017, நேரம்: காலை 9.00 -10 .30 மணி.
*************
ஸ்ரீசுந்தரமாகாளி அம்மன்
காலத்தால் முற்பட்ட காண்பதற்கரிய கற்கோயில்! அருள்சுரக்கும் ஈசனவன் முற்கால சோழர்களால் கார்குறிச்சி திருக்கற்றளி பெருமானாக இருந்து திருக்கட்டளை ஈஸ்வரமுடையாராகி பிற்கால மதில் சுந்தரேஸ்வரராக நாமம் கொண்டருளுகிறார். ஆறிரண்டு கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, பல்லவ ஆட்சி கால பணிமுறையை பறைசாற்ற சப்தமாதர், ஜேஷ்டாதேவி அமைவாலும் அவர்கால சரித்திரம் பாடுகின்றன. சோழர் படை பகைக்கொண்டு கடந்தபோது வந்தமர்ந்து இளைப்பாரி வாகைசூட வழிபட்ட காளியவள். சங்கப்பாடலாலும் போற்றப்படும் ஸ்ரீசுந்தரமாகாளி அம்மனுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளைக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாள்: 30.6.2017, நேரம்: காலை 9.15 -10 .15 மணி.
- பொ.ஜெயச்சந்திரன்
மகா சம்ப்ரோக்ஷணம்
திருவாரூர் மாவட்டம், சிவகாளிபுரம் எனும் சேங்காலிபுரத்தில் உள்ள புராணச் சிறப்பு மிகுந்த ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மற்றும் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாள் ஆலயங்களின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. அன்று மாலையே பரிமளரங்கநாதர் திருக்கல்யாண உத்சவமும் இரவு திருவீதி உலாவும் நடைபெறும்.
தொடர்புக்கு : 94440 56737 / 94441 43331.
நாள்: 25.6.2017, நேரம்: காலை 9.30 - 11 .00 மணி.
மண்டலாபிஷேகப் பூர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில் கருக்காய் மலை கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷண விழா, கடந்த மே-8 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெறுவதையொட்டி அன்று சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.
நாள்: 26.6.2017, நேரம்: காலை 6.30 -மதியம்
12 .00 மணி.
குருபூஜை
தில்லை திருப்பெருந்துறை (பர்ண சாலை) ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாதர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் சுவாமிக்கு மகாகுருபூஜை நடை
பெறுகின்றது.
நாள்: 28.6.2017.
*****************
அருள்மிகு சுருளிமலை மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகளின் 21 ஆம் ஆண்டு குருபூஜை, மாரியம்மன் கோயில் அஞ்சல், சிங்கவளநாடு சப்தரிஷி நத்தம் கிராமம், சுவாமிகள் தபோவனத்தில் (மூவர்கோட்டையார் வீடு) நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 04362 - 267704.
நாள்: 28.6.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com