பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மக்கள் எந்த இடத்தில் ஒன்றுகூடித் தங்கள் இதயத்திலிருந்து இறைவன் திருநாமங்களைக் கூறினாலும், அது இறைவன் வாழும் ஸ்தலமாகிவிடுகிறது. அது அவரது கோயில் ஆகிவிடுகிறது.  
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• மக்கள் எந்த இடத்தில் ஒன்றுகூடித் தங்கள் இதயத்திலிருந்து இறைவன் திருநாமங்களைக் கூறினாலும், அது இறைவன் வாழும் ஸ்தலமாகிவிடுகிறது. அது அவரது கோயில் ஆகிவிடுகிறது. 
- பாகவதம் 

• தேசம், காலம், பரிபக்குவம், குணதோஷம் ஆகியவற்றை அறிந்து பேசுபவனின் வார்த்தைகள் வீணாவதில்லை. ஆனால் பிரகஸ்பதியேயானாலும் கவனக்குறைவாக ஒரு வார்த்தைத் தவறாகப் பேசிவிட்டால், முட்டாள் பட்டத்துடன் இழிவையும் அடைய நேரிடும். 
- பஞ்சதந்திரம்

• கரையில்லாததும் கடப்பதற்கு அரியதுமாகிய இந்த சம்சாரத்தில் மறுபடியும் பிறப்பு  மறுபடியும் இறப்பு மறுபடியும் தாயின் வயிற்றில் கிடத்தல் என்று நான் 
இருந்துகொண்டிருக்கிறேன். இதிலிருந்து முராரியே, கருணைகூர்ந்து  என்னைக்  காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்கிறேன்.  
- பஜகோவிந்தம், 9

• புனிதமான கங்கையையும் சரஸ்வதிதேவியையும் வணங்குகிறேன். கங்கையில் குளித்தாலும் அதன் நீரைப் பருகினாலும் செய்த பாவம் விலகுகி றது. சரஸ்வதியை வேண்டினால் பாவம் செய்யத் தூண்டும் அவிவேகம் நீங்குகிறது.
- துளசி ராமாயணம் 

• சொல்லும் அதன் பொருளும்போல் இணை பிரியாமல் இருப்பவர்கள் ராமனும் சீதையும். நீரும் அதில் எழும் அலையும் போல் பெயரினால் மட்டும் வேறுபட்டு உண்மையில் ஒன்றாக இருப்பவர்கள் ராமனும் சீதையும். இவர்களின் திருவடியைப் போற்றுகிறேன். ராமனும் சீதையும் துன்பப்படுபவர்கள் மீது இரக்கம் கொண்டவர்கள். அக்கினி, சூரியன், சந்திரன் தோன்றக் காரணமாக அமைந்த ராமன் பெயரைத் தொழுகிறேன். "ராமநாமம் பிரம்மா விஷ்ணு சிவமயமானது; வேதத்தின் உயிர் நாடி போன்றது;  நிர்க்குணமானது, உவமையற்றது; எல்லையற்ற நற்குணக் களஞ்சியமானது! 
- துளசி ராமாயணம்   

• ராமநாமத்தின் மீது பார்வதிக்கு இருந்த பக்தியைப் பார்த்து சிவன் மகிழ்ச்சியடைந்தார். ஆகவே அம்பாளின் உருவத்தை ஏற்று அவர் அர்த்தநாரீசுவரர் ஆனார். ராமநாமத்தின் பெருமையைச் சிவன் அறிந்திருந்ததால், அவர் விழுங்கிய ஆலகால விஷம் அமுதமாகிவிட்டது.  
- துளசி ராமாயணம் 

• ராமநாம மகாமந்திரத்தைச் சிவன் ஜபம் செய்கிறார். காசியில் இறப்பவர்கள் மோட்சம் பெறுவதற்கு இந்த மந்திரம் உதவுகிறது. இதன் பெருமையை விநாயகர் அறிவார். இதனால் அவருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.  
- துளசி ராமாயணம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com