நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன்!

மேல மலை, கோட்டை மலை, கடம்பர்மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, பொன்மலை போன்ற ஒன்பது சிறு குன்றுகள் உள்ளன.
நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன்!

மேல மலை, கோட்டை மலை, கடம்பர்மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, பொன்மலை போன்ற ஒன்பது சிறு குன்றுகள் உள்ளன. ராம, ராவண இலங்கைப் போரின்போது மாண்டுபோன வீரர்களை உயிர்ப்பிக்க வைக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்தபோது அதிலிருந்து சிதறிய துகள்கள் இங்கு விழுந்து இக்குன்றுகள் உண்டாயின என்ற கர்ண பரம்பரை கதை கூறுகிறது.  

இம்மலைகளில் பல அரிய மூலிகைகள் இருப்பதாகவும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நாரதர் இங்கு தங்கியதால் நாரதர்மலை என்று பெயரிடப்பட்டதாகவும் மற்றொரு கோயில் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நார்த்தாமலை மேல மலையில் பழியிலி ஈச்சுவரம், சமணர் குடகு (விஷ்ணு கோயில்) ஆகிய குகைக்கோயில்களும், விஜயாலய சோழீச்சுவரம் எனும் பழைமையான கோயிலும் உள்ளது. ஆகாய கங்கை, அருமைகுளம், ஜம்புகேஸ்வரர் சுனை, பொழுதுபடாசுனை ஆகிய தீர்த்தங்கள் அமைந்த பெருமை இக்கோயிலுக்கான கூடுதல் சிறப்பாகும்.  

நார்த்தாமலை கோயிலில் ஆண்டுக்கு ஒருநாள் பூஜை செய்ய, ரூ. 1500 -ஐ செலுத்தினால் இந்த தொகை வங்கியில் நிரந்தர முதலீட்டில் வைக்கப்படும். பின்னர், பணம் செலுத்தியவர் விரும்பும் நாளில் பூஜை செய்து திருவருட் பிரசாதம் வழங்கப்படும். 

இவ்வாலயத்தில் இவ்வாண்டு பங்குனித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

வழித்தடம்: புதுக்கோட்டையில் இருந்து 19 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.  
- பொ.ஜெயச்சந்திரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com