சனிபகவானின் அருளைப் பெற செய்ய வேண்டியது: 

முடவர்களுக்கும் அநாதைகளுக்கும் உதவுவதன் மூலமும் தன்னலம் கருதாது மக்கள் தொண்டாற்றுவதன் மூலமும் சனிப்பிரீதி செய்த பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை
சனிபகவானின் அருளைப் பெற செய்ய வேண்டியது: 

முடவர்களுக்கும் அநாதைகளுக்கும் உதவுவதன் மூலமும் தன்னலம் கருதாது மக்கள் தொண்டாற்றுவதன் மூலமும் சனிப்பிரீதி செய்த பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை எள் தீபமேற்றி வழிபட்டும் வரவேண்டும். அவருக்கு உண்டான தலங்களான திருநள்ளாறு, திருக்கொல்லிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கும் சென்று வழிபட்டு வரவும். 

"பிரேத சம்ஸ்காரம்' என்ற இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கோ, எரிப்பதற்கோ உதவுவது மிகவும் உயர்ந்த சனிப்பிரீதியாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். குறிப்பாக, அநாதைப் பிணங்களை எரிக்க, அடக்கம் செய்ய நம் தேகத்தாலோ, பணத்தாலோ உதவி செய்பவர்கள் சனிபகவானின் அருளை விரைவில் பெறுவார்கள். அவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து விடும் என்பது உண்மை. அதனால்தான் என்னவோ அந்த காலத்தில் "பருப்புக்கு (திருமணம் போன்ற சுப காரியங்கள்) போகாவிட்டாலும் நெருப்புக்கு (சாவுக்கு) போகவேண்டும்'  என்ற பழமொழி உண்டானது என்று கூறவேண்டும். 

சனிப் பிரதோஷம்:  சுக்லபட்ச (வளர்பிறை) திரயோதசி திதியும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திரயோதசி திதியும் பிரதோஷ தினம் என்று வழங்கப்படுகிறது. இந்த நாளன்று தேவர்கள், அசுரர்கள் திருபாற்கடலைக் கடைந்த காலத்தில் அதில் தோன்றிய விஷத்திற்கு அஞ்சி சிவபெருமானை அடைக்கலமாக, சிவபெருமான் ஆலத்தை (விஷம்) உண்டு அனுக்கிரஹித்தார். இந்தப் பிரதோஷமானது சனி வாரத்துடன் (சனிக்கிழமை) கூடி வருதல் விசேடம் என்று புராணங்கள் கூறுகின்றன. இதை சனிப்பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்த நாளன்று சிவபெருமானை எண்ணி விரதமிருந்து அனுஷ்டிப்பவர்கள் இஷ்ட சித்தி அடைவார்கள் என்பது உண்மை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com