என்னைத் தொட்டது யார்?

தொடுதல் ஓர் இன்ப அனுபவம்! தாய் தன் குழந்தையை தொடுதலில் குழந்தையும் தாயும் இன்ப உணர்வை பெறுகின்றனர்.
என்னைத் தொட்டது யார்?

தொடுதல் ஓர் இன்ப அனுபவம்! தாய் தன் குழந்தையை தொடுதலில் குழந்தையும் தாயும் இன்ப உணர்வை பெறுகின்றனர். அப்பா தன் பிள்ளையின் கைபிடித்து வெளியே செல்லும்போது பிள்ளைகள் மிகவும் இன்ப உணர்வும் பாசத்தின் உணர்வும் பெறுகின்றனர். குழந்தைகள் தம் விளையாட்டு பொம்மையை தொட்டு மகிழ்கின்றன. 

வேதாகமத்தில் இயேசுவைத் தொட்டு குணமான ஒரு பெண்மணியின் நிகழ்ச்சி ஒன்று உண்டு. பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து தன ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும் ஒருநாளும் குணமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி (லுக்கா 8:43) இவ்வாறு ஒரு பெண்மணியின் துன்ப நோய்ப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. 

வேதாகமத்தில் சொல்லப்பட்ட இந்த பெண்மணி உதிரப்போக்கு நோயினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுள்ளார். இந்நோயினால், அந்த பெண் ரத்த சோகை உள்ளவளாகி, அழகுபோய் நடைப்பிணமாகிவிட்டார். 

அப்பெண்மணி சிறு வைத்தியம் தொடங்கி மிக செலவழிக்கும் வைத்தியம் வரை பன்னிரண்டு ஆண்டுகள் பார்த்தார்.  நெஞ்சை உருக்கும் துன்பம்! இத்துன்பத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது.

கொஞ்சமும் குணமாகாத நிலையில் மரண போராட்டமாக இருந்து கஷ்டப்பட்டாள். இயேசு அன்புள்ள தெய்வம். அவர் பாவங்களை மன்னிக்கின்றார். பேய் பிடித்தோர் விடுதலை பெறுகின்றனர். பார்வையற்றோர் பார்வை அடைகின்றனர். நடக்கமுடியாத மாற்றுத் திறனாளிகள் கால்கள் குணமடைந்து  நடக்கின்றனர். மரித்தவர் உயிர் பெறுகின்றனர் என கேள்விப்பட்ட அந்த பெண் இயேசுவிடம் சென்று குணமாக விரும்பினார்.

இப்பெண்மணி ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டாள். நடந்துபோகும் இயேசுவை நெருங்கி அவர் ஆடையின் கீழ்பகுதியை தொட்டால் குணமாவேன். அவரை சூழ்ந்துள்ள ஆண்கள் கூட்டம் தன் செயலை அனுமதிக்காது. கண்டுபிடிக்கப்பட்டால் தான் தண்டிக்கப்பட்டாலும் தண்டனை பற்றி கவலையில்லை என அப்பெரும் கூட்டத்தின் உள்ளே சென்று "குணமாக்கும்' என வேண்டி இயேசுவின் ஆடையை தொட்டாள். தொட்ட மாத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டு உதிரபோக்கு நின்று போயிற்று.

இயேசுவோ நின்று, " என்னை தொட்டது யார்?'' என கேட்டார். "குணமாக்கும் வல்லமை சென்று குணமாக்கியதே'' என்றார். இயேசுவின் சீடர்கள் ஆண்டவரே பெருங்கூட்டமாக உள்ளது;  எவராகிலும் உம்மை தொட்டிருப்பர்'' என்றனர்.

குணமான பெண்ணோ தாம் இயேசுவை தொட்டது தெரிந்து போனது என அறிந்து தான்பட்ட துன்பத்தையும் பன்னிரண்டு ஆண்டுகள் நோய் குணமானதை எல்லார் முன்பும் அறிவித்தாள். 

இவ்வாறு நோயுற்றவர் தொட்டது குற்றம் தண்டிக்கப்படுவோம் என பயந்தாள். இயேசு அப்பெண்மணியை பார்த்து, "மகளே திடங்கொள். உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது. சமாதானத்தோடு போ'' என்றார்.

நாமும் நம் நோயிலும் துன்ப நேரத்திலும் வறுமையிலும் உதவி வேண்டும் போதும் இயேசு கேட்ட மாத்திரத்தில் உதவி செய்வார். மனதால் வேண்டியும் அவரைத் தொட்டால் குணமளிப்பார்.
- தே. பால்பிரேம் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com