அன்னை மாமரியின் சிறப்பு!

ஆண்டுதோறும் செப்டம்பர் எட்டாம் நாள், அன்னை மரியாளின் பிறப்பை, உலகு மிகச் சிறப்பாக மகிழ்ந்து கொண்டாடுகிறது.
அன்னை மாமரியின் சிறப்பு!

ஆண்டுதோறும் செப்டம்பர் எட்டாம் நாள், அன்னை மரியாளின் பிறப்பை, உலகு மிகச் சிறப்பாக மகிழ்ந்து கொண்டாடுகிறது. குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலங்களில் சிறப்பான வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் அன்னை காட்சிகொடுத்த அல்லது அற்புதங்கள், புதுமைகள் நடந்து கொண்டிருக்கிற திருத்தலங்களில் மக்கள் குவிகிறார்கள்.

தன் உருவிலும் சாயலிலுமான மனிதன், கீழ்படியாமையினால் சாவுக்கு தள்ளப்பட்டாலும் அவன் மீது கொண்ட அன்பால் அவனை மீட்க மனிதவுரு எடுக்க விரும்பினார். தான் மனிதவுரு எடுக்கத் தகுதியான ஓர் ஆன்மாவை தன்னைப் போல் தூய்மையாய் பாவ மாசு இல்லாத, முதல் பெற்றோரின் "ஜென்ம மாசு' தீண்டாத ஓர் ஆன்மாவை தன் உள்ளத்திலே படைத்து, அதை நேசித்து, மகிழ்ந்து வந்தது முக்காலமும் அறிந்த ஞானம்.

"ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே என்னைப் படைத்தார்.. நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன். நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன். எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். எனவே, பிள்ளைகளே, எனக்கு செவி கொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்'' என நீதிமொழிகள் 8:22-32 இல் கூறப்பட்டுள்ளது.

திருவிவிலியத்தில் தொடக்க நூல் 3:15 இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "உனக்கும் பெண்ணுக்கும்; உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்  பகையை உண்டாக்குவேன். அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிக்காலைத் தீண்ட முயலுவாய்'' என்றார். புதிய மொழி பெயர்ப்பில் அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும் என்றுள்ளது. 

பொதுவாக, உலக வழக்கில் ஆண் மகனின் பெயரைச் சொல்லித்தான், இன்னார் மகன்இன்னார் என்று அழைக்கும். அதாவது தகப்பன் வழி. உதாரணமாக, ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோப்பு.. என்று மத்தேயு நற்செய்தி முதலாம் அதிகாரம் 1 இல் இருந்து 15 முடிய தலைமூறைகளைச் சொல்லும்போது 16 ஆவது இறைவார்த்தையாக யாக்கோப்பின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கூர்ந்து நோக்கின், மரியாளின் வித்து இயேசு சாத்தானின் தலையை நசுக்கும் என தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளது 
உண்மையாகிறது.

இறைமகன் இயேசு, மாமரியிடம் எப்படி கருவானர் என்று லூக்கா நற்செய்தி அதிகாரம் 1:34,35 இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர், அவரிடம் "உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். திருவிவிலிய பழைய ஏற்பாடு நிகழ்வுகளை எல்லால் படித்து, கற்றிருந்த மரியாள், " கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று வானதூதர் சொன்னதை நம்பினார். " " நான் கடவுளின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்''  என்றார். 
(லூக்கா 1:38)

இறைமகன் இயேசு, மெசியா, மீட்பர் எப்படி பிறப்பாரென்பதெல்லாம் இறைவாக்கினர்களால் முன்னுரைக்கப்பட்டபடி தானே நிகழ்ந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொன்னது- எழுதப்பட்டது; "கன்னி கருத்தாங்கி ஒரு மகனை பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்''மத்தேயு 2:22,23.

"யூதா நாட்டுப் பெத்லகேமே'', "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' இப்படி எத்தனையோ இறைவாக்குகள்.

அதுபோல, நோவாவின் பெட்டகம் காப்பாற்றப்பட்டது போன்று, மாமரி பாவ மாசின்றி பிறந்ததும் பச்சை முட்செடி ஒன்று தீப்பற்றி எரிகிறது. ஆனால் அது தீயினால் தீண்டப்படவில்லை. பரம்பொருள் எரிமுட்செடியினுள் சுவாலை வடிவாக மோயிசனுக்குத் தம்மை காண்பித்தது போல மாமரியின் கன்னிமை பழுதுபடாமல் காக்கப்பட்டதின் முன்அடையாளமன்றோ!
- ஜி.ஐ. பிரான்சிஸ் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com